1. Blogs

ரத்த தானம் செய்தால், திருப்பதியில் விரைவு தரிசன அனுமதி!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
If you donate blood, get quick darshan in Tirupati!

திருமலை திருப்பதி வேதஸ்தானம் சார்பில் நடத்தப்படும் மருத்துவமனைக்கு, ரத்த தானம் வழங்குவோருக்கு, விரைவு தரிசன அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தானத்தின் இந்த அறிவிப்பு, பக்தர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

மருத்துவமனை

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சுவிம்ஸ் பொது மருத்துவமனை, கை, கால் முறிவு மற்றும் தசை சதைவு உள்ளிட்டவற்றுக்கான பர்டு மருத்துவமனை, குழந்தைகளுக்கான இருதய மருத்துவமனை உள்ளது. இதுதவிர குழந்தைகளுக்கான மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ரூ.300 கோடியில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரத்தம் தேவை

இந்த மருத்துவமனையில் தினமும் பல்வேறு அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன. இதற்காக பல யூனிட் ரத்தம் பயன்படுத்தப்படுகிறது. இங்கு சிகிச்சை அளிக்கும் பக்தர்களுக்கு ஆரோக்கிய திட்டத்தில் இலவச சிகிச்சை அளிப்பதால், நோயாளிகள் வெளியே இருந்து ரத்தம் பெறக்கூடிய நிலை இல்லாதவர்களே அதிகம்.

புதியத் திட்டம்

இந்நிலையில், ரத்தம் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க, தேவஸ்தானம் புதிய திட்டம் கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து 75வது சுதந்திர தினவிழாவில் திருமலை அஸ்வினி மருத்துவமனை கண்காணிப்பாளர் குசுமகுமாரி பேசுகையில்,‘‘ரத்த தானம் செய்பவர்களை ஊக்குவிக்கும் விதமாக, சுபதம் நுழைவு வாயில் வழியாக ஏழுமலையான் விரைவு தரிசனத்தில் அனுமதிக்கப்படுவார்கள். அத்துடன் அவர்களுக்கு லட்டு பிரசாதம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.

பழைய திட்டம்

ஏற்கனவே, பல ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டம் தொடங்கப்பட்டது. இருந்தாலும், தினமும் 5-10 பக்தர்கள் ரத்த தானம் செய்கின்றனர்.
இதன் எண்ணிக்கை அதிகரிக்கவும், ரத்ததானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செய்யப்பட்டுள்ளது.

இங்கு சேகரிக்கப்படும் ரத்தம் பர்டு, சுவிம்ஸ், மகப்பேறு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் இதற்கு 18 முதல் 55 வயதுடைய ஆரோக்கியமானவர்கள் ரத்ததானம் செய்யலாம். ஆனால், சில மாதங்களுக்கு முன்பு அறுவை சிகிச்சை செய்தவர்கள், குறுகிய காலக்கட்டத்தில் தடுப்பூசி போட்டவர்கள், தீராத நோய் உள்ளவர்கள் ரத்த தானம் செய்யத் தகுதி இல்லாதவர்கள்  ஆவர். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க...

சந்தையில் விற்பனையாகும் செக்கச்சிவப்பான போலி செர்ரி!

தொழில் முனைவராக மாற ஆசையா? சிறப்பு பயிற்சி!

English Summary: If you donate blood, get quick darshan in Tirupati! Published on: 16 August 2022, 11:27 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.