உங்களுக்கு உடனடி கடன் தேவை இருப்பின் இந்த செய்தி உங்களுக்கு தான், இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் நிதி சேவை தளமான Paytm தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் இரண்டே நிமிடத்தில் ரூபாய் 2 லட்சம் வரை கடன் பெற முடியும்.
டிஜிட்டல் நிதி சேவையில் முன்னனி நிறுவனமாக கருதப்படும் Paytm, உடனடி தனிநபர் கடன் சேவையை(Paytm Instant Loans Service)அறிமுகம் செய்துள்ளது. Paytm நிறுவனத்தின் இந்தச் சேவையை ஆண்டின் 365 நாட்களிலும் பெறமுடியும். அதாவது விடுமுறை நாட்களிலும் கூட தனி நபர் கடன் சேவையில் நீங்கள் விண்ணப்பித்து பயன்பெற முடியும்.
இதன் மூலம் தனி நபர் கடன் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், உங்களது மொபைல் போனில் உள்ள Paytm App மூலமாக அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே வெறும் 2 நிமிடங்களில் 2 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம்.
எளியமுறை கடன் வசதி
உங்களது கிரெடிட் ஸ்கோர் மற்றும் திரும்ப செலுத்தும் வசதியைப் பொறுத்து உங்களுக்கு இதில் கடன் வழங்கப்படும். நீங்கள் இதில் வாங்கும் கடனை 18 முதல் 36 மாத ஈஎம்ஐ மூலமாகத் திருப்பிச் செலுத்தலாம். 2 நிமிடத்தில் வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்க Paytm நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் (NPFC) ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் சம்பளம் பெறும் நபர்கள், சிறு வணிக உரிமையாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு கடன்களை எளிதில் கிடைக்கச் செய்யும் இச்சேவை வழிவகும்கும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1000 கோடி கடன் வழங்கும் Paytm
இச்சேவையின் மூலம் நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் 10 லட்சம் வாடிக்கையாளர்களை ஈர்க்க Payt நிறுவனம் இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. 2021 மார்ச் மாத நிறைவுக்குள் சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1000 கோடி கடனை Paytm நிறுவனம் வழங்கவுள்ளது.
சிறு குறு நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் பேடிஎம் நிறுவனம் தனது கடன் திட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. இதன் மூலம் எங்களது வாடிக்கையாளர்கள் தங்களது தொழிலை விரிவுபடுத்த முடியும் எனவும், டிஜிட்டல் பிரிவில் மேம்படலாம் எனவும் paytm நிறுவனம் கூறியுள்ளது.
கடன் பெற விரும்பும் வாடிக்கையாளர்கள் Paytm பயன்பாட்டின் நிதி சேவைகள் பிரிவுக்குச் Financial Services section சென்று பின்னர் தனிநபர் Personal Loan கடன்கள் தாவலைக் கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கான உடனடி கடன் வேவையை பெற முடியும்
மேலும் படிக்க...
வீட்டுக் கடனுக்கான வட்டியை குறைத்தது, SBI வங்கி!
பிஸினஸ் ஐடியா 2021 : அமுல் உடன் தொழில் தொடங்கலாம் வாங்க! குறைவான முதலீட்டில் நிறைவான வருமானம்!!
விவசாயிகளுக்கு ரூ.5000 வரை ஓய்வூதியம் கிடைக்க வழிசெய்யும் அரசு திட்டங்கள்!
Share your comments