1. Blogs

நான் கோமா நிலையில் இல்லை - நித்தியானந்தாவின் அப்டேட்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
I'm not in a coma - Nithiyananda!

சர்ச்சைகளுக்குப் புகழ்பெற்ற சாமியார் நித்தியானந்தா கோமா நிலையில் இருப்பதாக வெளியானத் தகவலை அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
அதேநேரத்தில், ஓரிரு நாட்களில் திரும்பி வருவேன் என்றும் நித்யானந்தா கூறி உள்ளார்.

கைலாசா

குஜராத், கர்நாடகா போலீசாரால் தேடப்பட்டு வரும் சர்ச்சை சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடி கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் சமூக வலைதளங்களில் தினந்தோறும் வீடியோக்களை வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் சத்சங்க உரையாற்றி வந்தார்.

மருத்துவர்கள் சிகிச்சை

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது. இதனை மறுத்து பதிவிட்ட நித்யானந்தா தனது உடல்நலம் குறித்து வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக நித்தியானந்தா வெளியிட்ட பதிவில், நான் இறக்கவில்லை. சமாதி நிலையில் இருக்கிறேன். 27 மருத்துவர்கள் எனக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள் என கூறியிருந்தார். அதன்பிறகு அவர் வெளியிட்ட மற்றொரு பதிவில் என்னால் உணவு சாப்பிட முடியவில்லை. எனக்கு தூக்கம் வரவில்லை என கூறப்பட்டிருந்தது.

கோமா

இந்நிலையில் நித்யானந்தா கோமா நிலைக்கு சென்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

நித்தி மறுப்பு

இதற்கு மறுப்பு தெரிவித்து நித்யானந்தா இன்று தனது வலைதள பக்கத்தில் புதிய பதிவை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

சமாதி என்பது முற்றிலும் ஆரோக்கியம். அது உண்மையில் பிரபஞ்ச ஒழுங்குமுறை. பரமசிவனின் அறிவு மற்றும் சக்திகளின் மேலும் உயர்ந்த வெளிப்பாடுகளுக்கு உடல் சீரமைக்கிறது.

சமாதியின் உள்ளே இருப்பதன் மூலம் இப்போது ரசித்துக் கொண்டிருக்கும் சத்சங்கத்தை பகிர்ந்து கொள்வதற்காக நிச்சயமாக ஓரிரு நாட்களில் திரும்பி வருவேன். இவ்வாறு நித்யானந்தா கூறி உள்ளார்.

நித்தியானந்தாவின் ஆன்மீக உரைகள் மற்றும் எழுச்சிமிகு உரைகளுககு இளைஞர்கள் மத்தியில் எப்போதும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

ஜூன் 9ம் தேதி திருமணம் - லீக் ஆனது கல்யாணப் பத்திரிக்கை!

ஜூன் 23 பள்ளிகள் திறப்பு – கல்வித்துறை அறிவிப்பு!

English Summary: I'm not in a coma - Nithiyananda!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.