1. Blogs

தமிழுக்கு முக்கியத்துவம்: அமெரிக்காவில் உதயமானது வள்ளுவர் தெரு!

R. Balakrishnan
R. Balakrishnan
Valluvar Theru in United States

அமெரிக்காவில் ஒரு தெருவுக்கு உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் (Thiruvalluvar) பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்க வடக்கு வர்ஜீனியா பகுதியில் தமிழ்ப்பள்ளி நடத்தி வரும் வள்ளுவன் தமிழ் மையத்தின் முயற்சியால் இது நடந்துள்ளது. திருக்குறள் தமிழில் எழுதப்பட்ட நூலாக இருந்தாலும் உலகம் முழுவதும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறளுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரமும் கிடைத்துள்ளது. திருக்குறள் குறித்து ஐரோப்பிய நாடுகளில் ஆராய்ச்சியும் நடந்துள்ளன. திருக்குறளுக்கும், திருவள்ளுவருக்கும் உலகப் புகழ் உண்டு.

வள்ளுவர் தெரு (Valluvar Theru)

தற்போது திருவள்ளுவரை கவுரவிக்கும் வகையில் அமெரிக்காவில் ஒரு தெருவிற்கு வள்ளுவர் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவில் வெர்ஜினியா மாநிலத்தில் உள்ள பேர்பேக்ஸ் மாகாணத்தில் உள்ள ஒரு தெருவிற்கு வள்ளுவர் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளது. “அமெரிக்க மண்ணில் முதல்முறையாக வெர்ஜினியா மாநிலத்தில் பேர்பேக்ஸ் மாகாணத்தில் வள்ளுவர் தெரு” உருவாகியுள்ளதாக வள்ளுவன் தமிழ் மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெர்ஜினியா மாநில அவை உறுப்பினர் டெல் டான் ஹெல்மர் ட்விட்டரில், “தமிழ் சமூக உறுப்பினர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறேன். புகழ்பெற்ற கவிஞர் வள்ளுவர் பெயரில் அமெரிக்காவில் முதல்முறையாக வள்ளுவர் தெரு என பெயர் சூட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். இந்த தெரு ஆங்கிலத்தில் 'Valluvar Way' எனவும், தமிழில் வள்ளுவர் தெரு எனவும் அழைக்கப்படும்.

தமிழுக்கு முக்கியத்துவம் (Importance For Tamil)

வெளி நாடான அமெரிக்காவில் தமிழுக்கும், தமிழறிஞருக்கும் முக்கியத்துவம் கிடைத்திருப்பது தமிழர்கள் அனைவருக்கும் பெருமையாக உள்ளது. தமிழின் அருமை உலகெங்கிலும் பரவி இருப்பது ஆனந்தத்தை அளிக்கிறது.

மேலும் படிக்க

வேலைவாய்ப்புகளை வழங்கும் முக்கியத் துறைகள் எவை?

மிகப்பெரிய பவர் பேங்க்: வியப்பை ஏற்படுத்திய வெல்டர்!

English Summary: Importance for Tamil: Valluvar theru has emerged in the United States! Published on: 05 February 2022, 04:22 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.