ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) ஓய்வூதியதாரர்களின் வசதிக்காக பல அற்புதமான சேவைகளை செயல்படுத்தியுள்ளது. இந்த சேவைகளின் மூலமாக ஓய்வூதியம் பெறும் நபர்கள் வெளியில் அலையாமல் தங்களது வீட்டில் அமர்ந்தபடியே ஓய்வூதியம் மற்றும் அது தொடர்பான பல முக்கியப் பணிகளைச் செய்துகொள்ளலாம். இந்த பகுதியில் ஓய்வூதியதாரர்களின் நலனுக்காக ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தொடங்கியுள்ள சேவைகளை பற்றி பார்க்கலாம்.
ஓய்வூதியதாரர்களுக்கான வசதிகள்(Facilities for pensioners)
- ஓய்வூதிய கோரிக்கையை ஆன்லைனில் சமர்ப்பித்தல். ஓய்வூதியதாரர்கள் இபிஎஃப்ஓ உறுப்பினர் போர்டல் அல்லது உமாங் செயலி மூலமாகவும் கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம்.
- ஓய்வூதிய பாஸ்புக்கை ஆன்லைனில் சரி பார்க்கலாம்.
- டிஜி-லாக்கரில் இருந்து பென்ஷன் பேமென்ட் ஆர்டரை (பிபிஓ) டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
- மொபைல் ஆப் மூலம் வீட்டிலிருந்து டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட்டை சமர்ப்பிக்கலாம்.
முக அங்கீகாரம் மூலம் லைஃப் சர்டிபிகேட்டை உருவாக்குதல்:
- ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் 5 மெகா பிக்சல் கேமராவை இணையத்துடன் பயன்படுத்தலாம்.
- ஓய்வூதியம் வழங்கும் ஆணையத்தில் ஆதார் எண்ணை பதிவு செய்து வைத்திருக்க வேண்டும்.
- AadharFaceRd செயலியை டவுன்லோடு செய்யவும்.
- https://jeevanpramaan.gov.in/package/download-லிருந்து ஜீவன் பிரமான் செயலியை டவுன்லோடு செய்யவும்.
- இப்போது ஆபரேட்டர் அங்கீகாரம் மற்றும் முகத்தை ஸ்கேன் செய்ய வேண்டும்.
- ஓய்வூதியம் பெறுவோர் தங்கள் விவரங்களை நிரப்ப வேண்டும்.
- முன்பக்க கேமராவில் புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்கவும்.
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) அதன் உறுப்பினர்களுக்கு இபிஎஃப் மற்றும் இபிஎஸ் திட்டங்களின் வசதியை வழங்குகிறது. ஊழியர்களின் அடிப்படைச் சம்பளம் மற்றும் அகவிலைப்படியில் 12-12% இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது மற்றும் முதலாளியின் 12% தொகை இரண்டு பகுதிகளாக டெபாசிட் செய்யப்படுகிறது.
மேலும் படிக்க
மாற்றுத்திறனாளிகளுக்கு நற்செய்தி: ஏப்ரல் முதல் பேருந்தில் பயணிப்பது ஈசி!
Share your comments