PF Account Exit Date
PF நிதி நிறுவனம் அண்மையில், வாடிக்கையாளர்களால் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில்களை வெளியிட்டுள்ளது. அதில், “ஆன்லைன் டிரான்ஸ்பர் செய்து கொள்ள முந்தைய பணி / நிறுவனத்தில் இருந்து வெளியேறிய தேதியை கட்டாயம் குறிப்பிட வேண்டும். ஒரு வேலையில் இருந்து விலகிய பிறகு, புறப்பாடு தேதி என்பது விலகிய நாளில் இருந்து இரண்டு நாளுக்கு மேல் இருக்க வேண்டும் என்ற விதிமுறை திருத்தப்படுகிறது. அதற்குப் பதிலாக, புறப்பாடு தேதி என்பது, முந்தைய நிறுவனம் கடைசியாக உங்களுக்கு ஊதியம் வழங்கிய மாதத்தில் எந்த நாளாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
இந்த வசதியை, ஆதார் மூலமாக ஒன் டைம் பாஸ்வோர்டு பயன்படுத்தி நீங்கள் மேற்கொள்ள முடியும். யூஏஎன் கணக்கு எண்-ஐ ஆதார் எண்ணுடன் (Aadhar Number) இணைத்திருப்பவர்கள், அந்த ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் ஒன் டைம் பாஸ்வோர்டு பெறுவதன் மூலமாக இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எக்ஸிட் தேதியை மாற்ற (To Change Exit Date)
எக்ஸிட் தேதியை மாற்றுவதற்கு, பின்வரும் எளிய நடைமுறைகளை நீங்கள் பின்பற்ற வேண்டும்:
- https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணைய முகவரியில் யுஏஎன் கணக்கு எண் மற்றும் பாஸ்வோர்டு பயன்படுத்தி லாகின் செய்ய வேண்டும்.
- ‘மேனேஜ்’ என்ற டேப் மீது க்ளிக் செய்து, மார்க் எக்ஸிட் என்பதை க்ளிக் செய்ய வேண்டும். செலெக்ட் எம்ப்ளாய்மெண்ட் என்ற டிராப்டவுனில் பிஃப் அக்கவுண்ட் நம்பர் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
இதில் எக்ஸிட் தேதி மற்றும் அதற்கான காரணத்தை குறிப்பிடவும். - செக் பாக்ஸ்-இல் அப்டேட் என்பதையும், அதற்கு பிறகு ஓகே என்பதையும் க்ளிக் செய்யவும்.
- இதைத் தொடர்ந்து, உங்கள் எக்ஸிட் தேதி அப்டேட் செய்யப்பட்டது என்ற நோடிபிகேஷன் உங்களுக்கு வரும்.
சரிபார்க்கும் முறை (Verification method)
இ-மெம்பர் சேவை தளத்தில் உள்நுழைந்து ’வியூவ்’ மெனுவில் செர்விஸ் ஹிஸ்டரி என்பதை தேர்வு செய்வதன் மூலமாக, உங்கள் எக்ஸிட் தேதி அப்டேட் ஆகியிருக்கிறதா என்பதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க
இரயில் நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங்: மத்திய அரசு திட்டம்!
Share your comments