ஓரிரு மாதங்களில் கோடைக்காலம் துவங்கவுள்ள நிலையில் வெயிலின் தாக்கத்தை தணிக்க வல்ல, தர்பூசணியினை சாகுபடி செய்ய துவங்கி உள்ளனர் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள். ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை சாகுபடிக்கு உகந்த காலங்கள் என்பதால் பெரும்பாலான விவசாயிகள் தனிப்பயிராகவும், ஊடுபயிராகவும் தர்பூசணியை பயிரிடுகின்றனர். விதைத்த 45 நாட்களில் பூக்கள் பூத்து பிஞ்சுகள் உருவாகும். 65 முதல் 70 நாட்களில் காய்கள் முற்றி அறுவடைக்குத் தயாராகி விடும்.
விவசாயிகள் கூறுகையில், ஒரு ஏக்கர் தர்பூசணி பயிரிட ரூ.15 முதல் 20 ஆயிரம் வரை செலவாகிறது. கோடையில் அமோக விற்பனை இருப்பதால் பழங்கள் ரூ.30 முதல் ரூ.50 வரை விற்பனை செய்யப்படும். தற்போது அவர்களுடைய எதிர்பார்ப்பு அறுவடைக்கு முன், மழை பெய்யாமல் இருந்தால், நிச்சயம் லாபம் கிடைக்கும் என்கிறார்கள்.
Share your comments