ICICI Bank: Interest rate hike
தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான (Fixed Deposit) வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. 2 கோடி ரூபாய் முதல் 5 கோடி ரூபாய் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி உயர்த்தப்பட்டுள்ளது.
வட்டி உயர்வு (Interest Raised)
புதிய வட்டி விகிதங்கள் ஜூலை 11 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தியதை தொடர்ந்து பல்வேறு வங்கிகள் ஃபிக்சட் டெபாசிட் வட்டியை உயர்த்தி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது ஐசிஐசிஐ வங்கியும் வட்டியை உயர்த்தியுள்ளது.
புதிய வட்டி (New Interest)
- 7 - 14 நாட்கள் : 3.10%
- 15 - 29 நாட்கள் : 3.10%
- 30 - 45 நாட்கள் : 3.25%
- 46 - 60 நாட்கள் : 3.50%
- 61 - 90 நாட்கள் : 4%
- 91 - 120 நாட்கள் : 4.75%
- 121 - 150 நாட்கள் : 4.75%
- 151 - 184 நாட்கள் : 4.75%
- 185 - 210 நாட்கள் : 5.25%
- 211 - 270 நாட்கள் : 5.25%
- 271 - 289 நாட்கள் : 5.35%
- 290 நாட்கள் - 1 ஆண்டு : 5.35%
1 ஆண்டு - 389 நாட்கள் : 5.60%
390 நாட்கள் - 15 மாதம் : 5.60%
15 மாதம் - 18 மாதம் : 5.75%
18 மாதம் - 2 ஆண்டு : 5.75%
2 ஆண்டு - 3 ஆண்டு : 5.75%
3 ஆண்டு - 5 ஆண்டு : 5.75%
5 ஆண்டு - 10 ஆண்டு : 5.75%
மேலும் படிக்க
பென்சனர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட நிதியமைச்சர்!
ATM பிஸினஸ்: வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம்: எப்படித் தொடங்குவது?
Share your comments