WhatsApp இரண்டு புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது. அந்த இரண்டு புதிய வசதிகள் என்ன? அதனால் என்ன பயன் என்பதை கீழே காணலாம்.
WhatsApp செயலியை மெட்டா நிறுவனம் கைப்பற்றியது முதல் அதில் பல்வேறு வசதிகள் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தற்போது மேலும் 2 புதிய வசதிகளை அறிமுகப்படுத்த உள்ளது.
1.உங்களுக்கு என்று ஒரு USER NAME (பயனர் பெயர்) வைத்துக்கொள்ள இயலும். மற்றவர்களுக்கு அந்த பெயரை மட்டுமே பார்க்க இயலும் வகையில் settings வசதியும் உள்ளது. இதன்மூலம் உங்களது மொபைல் எண்ணை மற்றவர் பார்வையில் இருந்து மறைக்கவும் இயலும்.
2.ஸ்கிரீன்-ஷேரிங் என்கிற வசதியையும் அறிமுகப்படுத்த உள்ளது. Google Meet மற்றும் Zoom மீட்டிங்குகளில் நாம் செய்வது போல், புதிய அம்சம் பயனர்கள் வீடியோ அழைப்பின் போது தங்கள் திரையை எளிதாகப் பகிர உதவும். ஆனால், பெரிய குழு அளவிலான வீடியோ காலிற்கு இந்த வசதி கிடையாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. WhatsApp தற்போது 32 நபர்கள் வரை இணைக்கும் வசதியை கொண்டிருக்கிறது.
மேற்குறிப்பிட்ட இரண்டு புதிய அம்சங்களும் ஆண்ட்ராய்டின் பழைய பதிப்புகளில் கிடைக்காது. பெறுநர் வாட்ஸ்அப்பின் காலாவதியான பதிப்பைப் (old version) பயன்படுத்தினால், பயனரின் திரையில் காட்டப்படும் தகவல்களை அவர்களால் காண இயலாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக இந்த இரண்டு புதிய அம்சங்களும் WhatsApp Android பீட்டா சோதனையாளர்களுக்குக் கிடைக்கும். அவர்களின் பயன்பாட்டினை பொறுத்து விரைவில் அனைத்து WhatsApp பயனாளிகளுக்கும் கிடைக்கும் வகையில் இந்த வசதி செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் WhatsApp அனைவருக்கும் புதிய Chat Lock அம்சத்தை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதன்படி பயனர்கள், யாருக்கும் தெரியாமல் மறைக்க நினைக்கிற உரையாடல்களை 'சாட் லாக்' என்ற புதிய ஆப்ஷன் மூலம் மறைக்க இயலும்.
முதலில் நீங்கள் யாருடனான சாட்டினை மறைக்க வேண்டும் என நினைக்கிறீங்களோ, அவர்களது சாட் பக்கத்திற்கு செல்லுங்கள். பின் view contact என்பதை கிளிக் செய்யவும். அதில் இறுதி ஆப்ஷனாக chat lock என்கிற வசதி இருக்கும். அதனை கிளிக் செய்தால், மொபைலின் கடவுச்சொல் அல்லது கைரேகை போன்ற பயோமெட்ரிக் அங்கீகாரத்தை கேட்கும். அதையும் கொடுத்துவிட்டால் அவ்வளவு தான், இனி அந்த சாட் மற்றவர்களின் பார்வையிலிருந்து மறையும்.
மறைக்கப்பட்ட உரையாடலை நீங்கள் Archive Chats Check செய்வது போல தெரிந்துக்கொள்ளலாம். இந்த வசதி தனி நபருடனான உரையாடலை மட்டுமல்ல, ஒரு குழுவின் உரையாடலையும் உங்களால் இதை முறையை பின்பற்றி மறைக்க இயலும்.
சாட் லாக் செய்யப்பட்டிருக்கும் போது, யாராவது உங்களுக்கு மெசேஜ் அனுப்பினால், அந்த அரட்டை பூட்டப்பட்டிருந்தால், அனுப்புநரின் பெயர் மற்றும் செய்தியின் உள்ளடக்கம் ஆகியவை முற்றிலுமாக மறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
Share your comments