Cashback Credit Card
எஸ்பிஐ கார்டு (SBI Card) நிறுவனம் கேஷ்பேக் சலுகைகளுக்காக முதல்முறையாக கேஷ்பேக் எஸ்பிஐ கார்டு (Cashback SBI Card) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்திய கிரெடிட் கார்டு துறையிலேயே முதல் கேஷ்பேக் கார்டு இதுதான் என எஸ்பிஐ கூறுகிறது.
கிரெடிட் கார்டு (Credit Card)
பொதுவாக கிரெடிட் கார்டுகளில் ஷாப்பிங் சலுகைகள், கேஷ்பேக் சலுகைகள் என பல்வேறு சலுகைகள் அடங்கியிருக்கும். எனினும், இந்த கார்டு கேஷ்பேக் சலுகைகளை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ கேஷ்பேக் கார்டு பயன்படுத்தி ஆன்லைனில் பொருட்களை வாங்கினால் 5% கேஷ்பேக் கிடைக்கும் என எஸ்பிஐ கூறுகிறது. எந்தவித கட்டுப்பாடுகளுமின்றி ஆன்லைனில் மேற்கொள்ளும் எல்லா செலவுகளுக்கும் 5% கேஷ்பேக் கிடைக்கும் என்பது இந்த கார்டின் சிறப்பு அம்சம்.
SBI Card ஆப் வாயிலாக மிக எளிதாக ஆன்லைனிலேயே விண்ணப்பித்து எஸ்பிஐ கேஷ்பேக் கிரெடிட் கார்டை வாங்கலாம். வீட்டுக்கே நேரடியாக கார்டு டெலிவரி செய்யப்படும். இரண்டாம் நிலை நகரங்கள், மூன்றாம் நிலை நகரங்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் இந்த கார்டை பெற்றுக்கொள்ளலாம்.
2023 மார்ச் வரை இந்த கார்டை வாங்குவோருக்கு முதல் ஆண்டு எந்தக் கட்டணமும் இல்லை. இந்த கார்டை பயன்படுத்தி ஆன்லைனில் மேற்கொள்ளும் அனைத்து அளவில்லா செலவுகளுக்கும் 1% கேஷ்பேக் கிடைக்கும். ரூ.10,000 வரை செலவு செய்தால் 5% கேஷ்பேக் கிடைக்கும். இதுபோக இந்த கார்டில் உள்நாட்டு விமான நிலையங்களில் lounge வசதி பயன்படுத்த அனுமதி, பெட்ரோல் டீசல் கட்டணங்களில் சர்சார்ஜ் (fuel surcharge) தள்ளுபடி போன்ற சலுகைகளும் கிடைக்கும். இந்த கார்டை புதுப்பிக்க ஆண்டுக்கு 999 ரூபாய் மற்றும் வரியும் சேர்த்து கட்டணம் வசூலிக்கப்படும்.
மேலும் படிக்க
மாதந்தோறும் லட்சக்கணக்கில் வருமானம் தரும் அருமையான தொழில்!
EPFO பென்சன் வாங்க என்ன செய்ய வேண்டும்: அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!
Share your comments