1. Blogs

உண்மையில் எலக்ட்ரிக் பைக் லாபகரமானதா? தெரிஞ்சிக்கலாம் வாங்க!

R. Balakrishnan
R. Balakrishnan
Is the electric bike really profitable?

இந்தியா முழுவதும் எலக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகரித்துள்ள நிலையில் எலக்ட்ரிக் வாகனங்கள் வாங்குவது முதல், பயன்படுத்துவது வரையில் எது லாபகரமானது என்பதைக் கட்டாயம் தெரிந்து கொண்ட பிறகே பட்ஜெட் (Budjet) குடும்பங்கள் எலக்ட்ரிக் வாகனங்களை வாங்க வேண்டும். எலக்ட்ரிக் மற்றும் பெட்ரோல் ஸ்கூட்டர்
இந்த வகையில் தற்போது சந்தையில் கிடைக்கும் முன்னணி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் பெட்ரோலில் இயங்கும் இரண்டு ஸ்கூட்டரையும் ஒப்பிட்டுப் பார்ப்போம். தற்போது நாம் செய்துள்ளது ஏதர் 450எக்ஸ், ஹோண்டா ஆக்டிலா 6ஜி, டிவிஎஸ் ஜூப்பிடர் 125 ஸ்கூட்டர்கள் தான்.

ஸ்கூட்டர் விலை (Scooter price)

பொதுவாகக் காராக இருந்தாலும் சரி, பைக் ஆக இருந்தாலும், சரி ஒவ்வொரு மாநிலத்திலும் வரி விகிதங்கள் மாறுபடுவது வழக்கம், இதேவேளையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்குப் பல மாநிலங்கள் தற்போது பல்வேறு சலுகைகளை வழங்குகிறது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தமிழ்நாட்டில் ஏதர் 450எக்ஸ் ஸ்கூட்டர் விலை 1,46,296 ரூபாய், ஹோண்டா ஆக்டிலா 6ஜி ஸ்கூட்டர் விலை 73,815 ரூபாய், டிவிஎஸ் ஜூப்பிடர் 125 ஸ்கூட்டர் விலை 78,625 ரூபாய்.

கிட்டதட்ட ஏதர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை மற்ற இரு பெட்ரோல் வாகனங்களைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிக விலை. விலை அளவுகளைப் பெருத்த வரையில் தற்போது பெட்ரோல் வாகனங்கள் தான் நடுத்தர மக்களுக்கு உகந்தது.

ரேஞ்ச் பிரச்சனை (Range Problem)

பெட்ரோல் வாகனங்களில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்ல முடியும், போகும் தூரம் அனைத்திலும் பெட்ரோல் பங்க இருக்கும் காரணத்தால் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதில் பயம் இல்லை. ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ரேஞ்ச் பயம் எப்போதும் உள்ளது. இந்தியாவில் இதற்கான கட்டமைப்பு இன்னும் முழுமையாக இல்லாத காரணத்தால் இந்தப் பயம் உள்ளது.

பராமரிப்பு பிரச்சனை (Maintenance Problem)

இதேபோல் பெட்ரோல் வாகனங்களுக்கு மெயின்டனன்ஸ் செலவுகள் சற்று அதிகம், ஆனால் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு அத்தகைய செலவுகள் பெரிதாக இல்லை. ஆனால் 5 வருடம் அல்லது 10 வருடத்திற்குப் பின்பு பேட்டரி பேக் மாற்ற வேண்டிய கட்டாயம் வந்தால் இதன் விலை மிகவும் அதிகம்.

ஒரு கிலோமீட்டருக்குச் செலவு

ஏதர் 450எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒரு கிலோமீட்டர் பயணிக்க 0.24 ரூபாய் மட்டுமே, ஆனால் ஹோண்டா ஆக்டிலா 6ஜி வாகனத்தில் ஒரு கிலோமீட்டர் பயணிக்க 2.12 ரூபாய், டிவிஎஸ் ஜூப்பிடர் 125 ஒரு கிலோமீட்டர் பயணிக்க 2.12 ரூபாய்ச் செலவாகிறது.

ஒனர்ஷிப் காஸ்ட் (Ownership Cost)

அதாவது ஒரு வாகனம் வாங்கியதில் இருந்து அதன் விலை, எரிபொருள் செலவுகள், மெயின்டனன்ஸ் செலவுகள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கணக்கிடப்படும் அளவீடு தான் ஒனர்ஷிப் காஸ்ட்.

முதல் 10000 கிலோமீட்டர்க்கு

  • ஏதர் 450எக்ஸ் - 13.72 ரூபாய்
  • ஹோண்டா ஆக்டிலா 6ஜி - 10.89 ரூபாய்
  • டிவிஎஸ் ஜூப்பிடர் 125 - 10.89 ரூபாய்

20000 கிலோமீட்டர்க்கு

  • ஏதர் 450எக்ஸ் - 6.98 ரூபாய்
  • ஹோண்டா ஆக்டிலா 6ஜி - 6.51 ரூபாய்
  • டிவிஎஸ் ஜூப்பிடர் 125 - 6.51 ரூபாய்

30000 கிலோமீட்டர்க்கு

  • ஏதர் 450எக்ஸ் - 4.73 ரூபாய்
  • ஹோண்டா ஆக்டிலா 6ஜி - 5.04 ரூபாய்
  • டிவிஎஸ் ஜூப்பிடர் 125 - 5.04 ரூபாய

சாமானிய மக்கள்

இதிலிருந்து சாமானிய மக்களும், நடுத்தர மக்களும் எடுக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும் போது அதன் விலை அதிகமாக இருந்தாலும், பயன்படுத்தும் போதும் அதன் செலவுகள் காலப்போக்கில் குறைகிறது என்பது தான்.

மேலும் பெட்ரோல் விலை அதிகமாக இருக்கும் காரணத்தால் தான் இந்த வித்தியாசம் வருகிறது. பெட்ரோல் விலை குறைந்தால் எலக்ட்ரிக் வாகன சற்று காஸ்ட்லியாகவே இருக்கும்.

மேலும் படிக்க

இரயில் நிலையங்களில் மின்சார வாகன சார்ஜிங்!

கார் வாங்க வந்த விவசாயி: ஏளனம் செய்து விட்டு மன்னிப்பு கேட்ட ஊழியர்!

English Summary: Is an Electric Bike Really Profitable? Come find out! Published on: 27 January 2022, 07:04 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.