மத்திய ரிசர்வ் வங்கி ஸ்ரீ மாதா வைஷ்ணோ தேவி கோவில் வாரியத்தின் வெள்ளி விழாவை முன்னிட்டு, சில ஆண்டுகளுக்கு முன் புதிய ஐந்து ரூபாய், பத்து ரூபாய் நாணயங்களை வெளியிட்டது. அன்னை வைஷ்ணவ தேவி நாணயம் மிகவும் அதிர்ஷ்ட நாணயமாக கருதப்படுகிறது. இந்த நாணயங்களுக்கு சந்தையில் தற்போது தேவை அதிகமாக உள்ளது. அவை தற்போது சுமார் 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்படுகின்றன.
அரிய நாணயங்களுக்கு சந்தையில் எப்போதுமே மதிப்பு உண்டு. சில சமயங்களில் பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களுக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்திப் பெற மக்கள் தயாராக உள்ளனர். அந்த வகையில், 5 மற்றும் 10 ரூபாய் கொண்ட வைஷ்ணவ தேவியின் உருவப்படம் கொண்ட சிறப்பு நாணயங்கள் 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சிறப்பு
இந்த சிறப்பு நாணயங்களில் வைஷ்ணோ தேவியின் படம் உள்ளதால், அவை மிகவும் அதிர்ஷ்டத்தை கொண்டு வரும் என்று நம்புகின்றனர்.
அவர்களது இந்த நம்பிக்கை காரணமாக, 10 லட்சம் ரூபாய் கொடுத்து, அத்தகைய நாணயத்தை வாங்க மக்கள் தயாராக உள்ளனர். இந்து மதத்தில், அன்னை வைஷ்ணவ தேவிக்கு முக்கிய இடம் உள்ளது. ஜம்முவில் அமைந்துள்ள மாதா வைஷ்ணவ தேவி கோவிலில் அன்னையை தரிசனம் செய்வதற்காக ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் பல கிலோமீட்டர்கள் மலையேறி செல்வது குறிப்பிடத்தக்கது.
சிறப்பு நாணயங்கள், பழைய நாணயங்கள், பழைய ரூபாய் நோட்டுக்கள் பல்வேறு இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் ஏலம் விடப்படுகின்றன. இதற்காக, நாணயத்தின் புகைப்படத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும், அதன் பிறகு நாணயங்களுக்கான ஏலம் பெறப்படும்.
மேலும் படிக்க...
பளபளக்கும் பப்பாளி-ஆண்மைத்தன்மையை பாதிக்கும்!
இவற்றைத் தவிர்க்காவிட்டால், உங்கள் எலும்புகள் பொடிப்பொடியாவது உறுதி!
Share your comments