ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர் பழைய நிறுவனத்தில் உள்ள வேலையை விட்டு புதிய நிறுவனத்தில் சேர்ந்த பின் அவரது பிஎஃப் கணக்கில் இருக்கும் முழு தொகையையும் திரும்ப பெற்றால் பெரிய நஷ்டத்தை ஏற்படுத்திவிடும்.புது வேலைக்கு சென்றபின் நீங்கள் இதுபோல் பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தை எடுப்பது உங்களது எதிர்காலத்திற்காக உருவாக்கப்பட்ட பெரும் நிதி மற்றும் சேமிப்பில் பின்னடைவை ஏற்படுத்துகிறது.
புதிய பிஎஃப் கணக்குடன் இணைப்பு(Link to new PF account)
பிஎஃப் கணக்கை புது நிறுவனத்துடன் இணைப்பதுதான் புத்திசாலித்தனமான வேலை ஆகும். ஊழியர்கள் வேலையைவிட்டு வெளியேறினாலும் அல்லது சில காரணங்களால் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டாலும் நீங்கள் இன்னும் சில ஆண்டுகளுக்கு உங்கள் பி.எஃப் கணக்கை விட்டு விடலாம்.
அதோடு பிஎஃப் பணம் தேவையில்லை என்றாலும் அந்த கணக்கில் உள்ள பணத்தை உடனே எடுக்க வேண்டாம். ஏனென்றால் வேலையை விட்டு வெளியேறிய பிறகும் உங்கள் பிஎஃப் மீதான வட்டி தொடர்ந்து பெறப்படுகிறது.
புதிய வேலை கிடைத்ததும் அந்த பிஎஃப் கணக்கை நீங்கள் உங்களின் புதிய நிறுவனத்திற்கு மாற்றிக்கொள்ளலாம். பிஎஃப் கணக்கு வட்டி 36 மாதங்களுக்கு அதாவது வேலையை விட்டு வெளியேறிய 3 வருடங்களுக்கு பின் கிடைக்கும்.
இதில் முதல் 36 மாதங்களுக்கு பங்களிப்பு இல்லையெனில், அந்த ஊழியரின் பிஎஃப் கணக்கு செயல்படாத கணக்கு என்ற பிரிவில் சேர்க்கப்பட்டு விடும். உங்களது பிஃப் கணக்கை செயலில் வைத்திருக்க 3 வருடங்களுக்கு முன் நீங்கள் சிறிது தொகையினை எடுத்திருக்க வேண்டும்.
அரசின் விதிகளின் அடிப்படையில் பிஎஃப் கணக்கில் ஊழியர்கள் பங்களிப்பு செய்யவில்லை எனில் உங்களது பிஎஃப் கணக்கு செயலிழக்காது. எனினும் பங்களிப்பு செய்யப்படாத இந்த காலக்கட்டத்தில் உங்களுக்கு கிடைக்கும் வட்டிக்கு வரிவிதிக்கப்படும். அதுமட்டுமின்றி உங்களது பிஎஃப் கணக்கு செயலிழந்த பின்பும் நீங்கள் க்ளைம் செய்யவில்லை எனில், அத்தொகை மூத்தக்குடிமக்கள் நல நிதிக்கு (எஸ்சிடபுள்யூஎஃப்) மாற்றப்படும்.
மேலும் படிக்க
முதியோர் பென்ஷனுக்கு வீட்டில் இருந்தபடியே விண்ணப்பிப்பது எப்படி?.. தகவல் இதோ.!
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு, உரிய பொருட்களை விநியோகிக்க வேண்டும்.!
Share your comments