1. Blogs

இந்த 5 ரூபாய் இருக்கா? இந்தாங்க பிடிங்க ரூ. 2 லட்சம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Is this 5 rupees? This is 2 lakh rupees!

நீங்கள் லட்சாதிபதியாகக் கொடி கட்டிப் பறக்க இந்த ஒற்றை ரூபாய் நோட்டு இருந்தால் போதும். ஆனால், இது அரிதான நோட்டு! உங்களிடம் உள்ளதா இந்த ஒற்றை ரூபாய் நோட்டு எனத் தேடுங்கள். இந்த 5 ரூபாய் இருக்கா? அப்படியென்றால் 2 லட்ச ரூபாய் கிடைக்கும் அதிர்ஷ்டசாலி நீங்கள்தான்.

வீட்டில் இருக்கும் ஐந்து ரூபாய்த் தாளை பத்திரமாய் பாதுகாத்து வைத்திருப்பவர்களுக்கு இரண்டு லட்ச ரூபாய் ஜாக்பாட் பரிசை அள்ளிக் கொடுக்கும். உங்கள் நோட்டு சேகரிப்பில் 5 ரூபாய் டிராக்டர் நோட்டு (5 Rupee Tractor Note) இருந்தால், லட்சக்கணக்கான ரூபாய்க்கு நீங்கள் தான் அதிபதி.

டிராக்டர் நோட்டு

பழங்கால நாணயங்கள் மற்றும் நோட்டுகள் போன்றவற்றை சேகரித்து பாதுகாப்பதை பலர் பொழுதுபோக்காக வைத்திருக்கின்றனர். அப்படி பார்த்து பார்த்து சேமிப்பவர்களிடம் கூட இல்லாத சில பழைய ரூபாய் நோட்டுகள் (Old Rupees), நமது வீட்டின் உண்டியலிலோ அல்லது வேறு எங்காவதோ இருக்கலாம். உங்களிடம் இந்த பழைய ரூ.5 டிராக்டர் நோட்டு இருந்தால், அதை ஆன்லைனில் விற்பனை செய்து லட்சாதிபதி ஆகலாம்.

நோட்டின் சிறப்பு

  • இந்த 5 ரூபாய் டிராக்டர் நோட்டு Antique Collection எனப்படும் புராதன பொருட்கள் என்ற வகைக்குள் வருகிறது.

  • உங்களிடம் உள்ள 5 ரூபாய் நோட்டில் டிராக்டர் சின்னம் அச்சிடப்பட்டிருக்க வேண்டும். 786 என்ற எண் அதில் எழுதியிருக்க வேண்டும். பழங்கால ரூபாய் நோட்டுகளில் இது அரிதாகக் கருதப்படுகிறது.

  • இந்த நோட்டு இந்திய ரிசர்வ் வங்கியில் மிகவும் அரிதான நோட்டுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

விற்பது எப்படி?

இந்த 5 ரூபாய் நோட்டு இருந்தால், வீட்டில் அமர்ந்தபடியே உங்கள் வீடு தேடி அதிர்ஷ்ட லட்சுமி கதவைத் தட்டுவாள். coinbazzar.com இன் ஆன்லைன் தளத்திற்கு சென்று முதலில் உங்களை பதிவு செய்துக் கொள்ளவும்.

உங்களை ஆன்லைன் விற்பனையாளராகப் பதிவு செய்த பிறகு, ரூபாய் நோட்டின் படத்தை பதிவேற்றம் செய்யவும். இந்த செயல்முறைக்குப் பிறகு, ஆர்வமுள்ளவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள், நீங்கள் வீட்டில் உட்கார்ந்தபடியே 5 ரூபாய்க்கு பதிலாக பல ஆயிரம் ரூபாய்களைப் பெறலாம்.

மேலும் படிக்க...

தமிழ்நாட்டில் பழைய பென்சன் திட்டம்?

கத்திரிக்காயை பச்சையாக கடித்துக் காண்பித்த பெண் எம்.பி!

English Summary: Is this 5 rupees? This is 2 lakh rupees! Published on: 12 August 2022, 10:59 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.