அடுப்பு எரித்த காலம் மலையேறி தற்போது அனைத்து வீடுகளிலும் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த சிலிண்டர்கள் பாதுகாப்பானவையா? என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
சிலிண்டர்
எல்பிஜி சிலிண்டர்கள் அனைத்தும் சிறப்பு ஸ்டீலால் உருவாக்கப்பாட்டவை. மேலும், பாதுகாப்புக்காக சிலிண்டர் மேல் பாதுகாப்பு கோட்டிங் கொடுக்கப்பட்டுள்ளன. பிஐஎஸ் தரநிலைகளுக்கு ஏற்ப சிலிண்டர்கள் உருவாக்கபடுகின்றன.
சிலிண்டர் பரிசோதனை
எல்லா சிலிண்டர்களுமே குறிப்பிட்ட காலத்துக்கு ஒரு முறை முழுமையாக பரிசோதிக்கப்பட வேண்டும். புதிய சிலிண்டர் 10 ஆண்டுகள் கழித்து பரிசோதிக்கப்படும். அதன்பின் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒருமுறை பரிசோதிக்கப்படும்.
யார் பரிசோதிப்பது?
சிலிண்டர்களை நிரப்பும் ஆலைகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்களால் சிலிண்டர்கள் பரிசோதிக்கப்படுகின்றன. பரிசோதிக்கப்பட்டபின் அடுத்த சோதனைக்கான தேதி ஒட்டப்பட்டு சிலிண்டர் அனுப்பிவைக்கப்படும்.
அடுத்த பரிசோதனை?
எல்லா சிலிண்டர்களிலுமே அடுத்த பரிசோதனைக்கான காலம் எப்போது என்பது குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக, உங்கள் சிலிண்டரில் A 2022 என குறிப்பிடப்பட்டிருந்தால் அந்த சிலிண்டர் 2022ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் மாதத்துக்குள் பரிசோதிக்கப்பட வேண்டும்.
B 2022 என குறிப்பிடப்பட்டிருந்தால் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் மாதத்துக்குள் பரிசோதிக்கப்பட வேண்டும். C 2022 என குறிப்பிட்டிருந்தால் 2022ஆம் ஆண்டு ஜூலை முதல் செப்டம்பர் மாதத்துக்குள் பரிசோதிக்கப்பட வேண்டும். D 2022 என குறிப்பிடப்பட்டிருந்தால் 2022ஆம் ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்துக்குள் பரிசோதிக்கப்பட வேண்டும். குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டுக்கு ஏற்ப நாம் அடுத்த பரிசோதனைக்கான காலத்தை கணித்துக்கொள்ளலாம்.
சிலிண்டர் பாதுகாப்பு
சிலிண்டருக்கான அடுத்த பரிசோதனை எப்போது என்பதை தெரிந்துகொள்வதன் வாயிலாக உங்கள் வீட்டில் இருக்கும் சிலிண்டர் பாதுகாப்பானதா என்பதை உறுதிசெய்து கொள்ள முடியும்.
எனவே சிலிண்டர் பாதுகாப்பானதா என்பதை உறுதி செய்துகொண்டு, பெரும் விபத்துக்களைத் தவிர்க்க முன்வருவோம்.
மேலும் படிக்க...
எழுத்துத் தேர்வு கிடையாது-தபால் துறையில் 38,926 பேர் பணி நியமனம்!
Share your comments