1. Blogs

ராணுவத்தில் பெண்களுக்கு வேலை- நர்ஸ்கள் விண்ணப்பிக்கலாம்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Jobs for women in the military - Nurses can apply!
Credit : IndiaMART

நர்ஸ் எனப்படும் செவிலியர்களின் பணி, ஈடு இணையில்லாதது. உடல்நலம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு செய்யும் சேவை, இறைவனுக்கு செய்யும் சேவைக்கு நிகரானது.

ராணுவத்தில் சேர வாய்ப்பு (Opportunity to join the army)

அதனால்தான் செவிலியர் பணி செம்மையான பணியாகப் பார்க்கப்படுகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த செவிலியர் பணியை, இந்திய ராணுவத்தில் செய்ய ஆசையா? இதோ உங்களைத் தேடி வருகிறது அந்த வாய்ப்பு!

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள பி.எஸ்.சி நர்ஸிங் பணிக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

யார் யார் விண்ணப்பிக்கலாம்? (Who can apply?)

திருமணமாகாத பெண்கள், விதவைகள், சட்டப்படி விவாகரத்து பெற்ற பெண்கள் ஆகியோர், இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

காலியிடங்கள் (Vacancies)

மொத்தம்                              - 200
1.CON.AFMC Pune                    - 40
2.CON.CH (EC) Kolkata             - 30
3.CON.INHS (Asvini)                 - 40
4.CON.AH ( R & R) New Delhi    - 30
5.CON.CH (CC) Lucknow           - 40
6.CON.CH (AF) Bengalore          - 40

கல்வித்தகுதி  (Education Qualification)

இயற்பியல், வேதியில், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல் மற்றும் ஆங்கிலம் பாடப்பிரிவுகளில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று 4 ஆண்டுகால பி.எஸ்.சி நர்ஸிங் முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை (Method of selection)

கணினி வழி ஆன்லைன் எழுத்துதேர்வு, நேர்முகத்தேர்வு, மருத்துவத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் (Application fee)

விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை (How to apply)

www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் (Last Date)

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 10.03.2021

மேலும் படிக்க...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகளுககு மாநில அரசின் அறிவியலாளர் விருது!

உரிமையாளரின் உயிரைக்குடித்த சேவல் சண்டை!

மானியத்தில் கிணறு ரெடி- மின்சாரம் எப்போ கிடைக்கும்?

English Summary: Jobs for women in the military - Nurses can apply! Published on: 02 March 2021, 11:36 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.