July Bank Holiday 2022: ஜூலை மாதம் நாளை முதல் தொடங்குகிறது. ஜூலை மாதத்தில் வங்கியில் உங்களுக்கு பணிகள் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஜூலை 2022க்கான விடுமுறைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலின்படி, ஜூலை மாதம் மொத்தம் 16 நாட்களுக்கு வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடதக்கது.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வங்கி விடுமுறைப் பட்டியலை மூன்று வகைகளாகப் பிரித்துள்ளது. இதில் நெகோஷியபிள் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் ஆக்ட், ரியல் டைம் க்ராஸ் செட்டிள்மெண்ட் ஹாலிடே மற்றும் பாங்க்ஸ் க்ளோசிங் ஆஃப் அகௌண்ட்ஸ் ஆகியவை, இதில் அடங்கும்.
தேசிய விடுமுறைகள் தவிர, பிரத்யேகமான சில மாநில விடுமுறைகளும், இதில் இடம்பெற்றுள்ளன. இதில் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் மாதத்தின் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும் அடங்குகிறது. ஜூலை மாதத்தில் எந்தெந்த நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதை அறிந்திட பதிவை தொடருங்கள்.
மேலும் படிக்க: பூச்சித் தாக்காத தினை சாகுபடி: சில நுணுக்கங்கள்!
இதோ விடுமுறை நாட்களின் பட்டியல்:
ஜூலை 1 2022 | காங் (ரத்ஜத்ரா) / ரத யாத்திரை - புவனேஸ்வர் மற்றும் இம்பாலில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் |
ஜூலை 3 2022 | ஞாயிறு (வார விடுமுறை) |
ஜூலை 5 2022 | செவ்வாய் - குரு ஹர்கோவிந்தின் ஒளி நாள் - ஜம்மு மற்றும் காஷ்மீர் |
ஜூலை 6 2022 | புதன் - MHIP நாள் - மிசோராம் |
ஜூலை 7 2022 | கர்ச்சி பூஜை - அகர்தலாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் |
ஜூலை 9 2022 | சனிக்கிழமை (மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை), ஈத்-உல்-அதா (பக்ரீத்) |
ஜூலை 10 2022 | ஞாயிறு (வார விடுமுறை) |
மேலும் படிக்க:News Update: நாளை மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கான எச்சரிக்கை
ஜூலை 11 2022 | ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் Ez-ul-Aza- வங்கிகள் மூடப்பட்டன |
ஜூலை 13 2022 | பானு ஜெயந்தி - காங்டாக்கில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் |
ஜூலை 14 2022 | பென் டியன்க்லாம் - ஷில்லாங்கில் வங்கிகள்மூடப்பட்டிருக்கும் |
ஜூலை 16 2022 | ஹரேலா-டேராடூனில் வங்கி மூடப்பட்டது |
ஜூலை 17 2022 | ஞாயிறு (வார விடுமுறை) |
ஜூலை 23 2022 | சனிக்கிழமை (மாதத்தின் நான்காவது சனிக்கிழமை) |
ஜூலை 24 2022 | ஞாயிறு (வார விடுமுறை) |
ஜூலை 26 2022 | கேர் பூஜை - அகர்தலாவில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் |
ஜூலை 31 2022 | ஞாயிறு (வார விடுமுறை) |
மேலும் படிக்க:
தேசிய இயற்பியல் ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு! ரூ.63ம் சம்பளம்
சேமிப்புக் கிடங்குகளை அமைக்க அரசு நிதியுதவி எவ்வாறு பெறுவது?
Share your comments