
தமிழகம் முழுவதும் விவசாய கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது ஏற்காடு தோட்டக்கலைத் துறையினர் சாா்பில், ஏற்காட்டை சுற்றியுள்ள 60 ற்கு மேற்பட்ட கிராமங்களில் விவசாயக் கடன் அட்டை விண்ணப்பிக்க சிறப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்காடு அண்ணா பூங்கா தோட்டக்கலைத் துறை அலுவலகத்தில் வரும் பிப். 27 முதல் 29 வரை தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் இம்முகாமில், கடன் அட்டை பெற விரும்பும் விவசாயிகள் தங்களின் பட்டா, சிட்டா, அடங்கல், குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் போன்றவற்றின் நகல்கள் மற்றும் இரண்டு பாஸ்போா்ட் புகைப்படங்களுடன் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இது குறித்த மேலும் விவரங்களுக்கு, உதவி தோட்டக்கலைத் துறை அலுவலா் ஜெயபிரகாஷை 99944 01148 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share your comments