1. Blogs

குறைந்த வட்டியில் கடன்: மத்திய அரசின் சிறப்பு கடன் முகாம்!

R. Balakrishnan
R. Balakrishnan

Loan with low interest

மத்திய கூட்டுறவு வங்கி சிறப்பு கடன் முகாம்களை நடத்தி அதன் மூலம் அதிக கடன்களை மக்களுக்கு வழங்கவும் மற்றும் அரசு திட்டங்களை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இதனை தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

குறைந்த வட்டியில் கடன் (Loan with low interest)

மத்திய கூட்டுறவு வங்கி தமிழகத்தில் ஏராளமான அரசு மற்றும் தனியார் வங்கிகள் குறைந்த வட்டியில் கடன்களை வழங்கி வருகின்றன. இதில் சென்னை மத்திய கூட்டுறவு வங்கியானது 91 ஆண்டுகளாக இயங்கி கொண்டு வருகிறது. இந்த வங்கி 1930-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் செயல்பட்டு கொண்டு வருகிறது. மத்திய கூட்டுறவு வங்கியானது சென்னையில் மட்டும் 71 கிளைகளை கொண்டுள்ளது. இந்த வங்கி மூலம் குறைந்த வட்டியில் நகை கடன்களை பெற முடியும். மேலும் இந்த வங்கி மூலம் பல்வேறு வகையான கடன்களை குறைந்த வட்டியில் பெற முடியும்.

அதில் குறிப்பாக மகளிர் சுய உதவி குழு கடன், மகளிர் வளர்ச்சி கடன், பணிபுரியும் மகளிர் கடன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கடன், மாற்றுத்திறனாளிகள் கடன், சிறு தொழில் மேம்பாட்டு கடன், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான கடன் போன்ற கடன்களை குறைந்த வட்டியில் பெற முடியும்.

தற்போது இந்த வங்கியானது வங்கி சிறப்பு கடன் (Special Loan) முகாம்களை அனைத்து பகுதிகளிலும் நடத்தி அதன் மூலம் அதிக கடன்களை மக்களுக்கு வழங்கவும் மற்றும் அரசு திட்டங்களை செயல்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. அதன்படி இன்று ஆதம்பாக்கம் கிளையில் சிறப்பு கடன் முகாம் நடைபெற உள்ளது.

முகாம் நடக்கும் தேதி (Date for Camp)

அதன்படி வருகிற ஜனவரி-8 ஆம் தேதி பாண்டி பஜார் கிளையில் சிறப்பு கடன் முகாம் நடத்தப்பட்டு அதன் மூலம் 72 வாடிக்கையாளருக்கு ரூ.34.51 லட்சம் வழங்க உள்ளதாக திட்டமிட்டுள்ளது. அத்துடன் மேலும் முகாம்கள் நடக்கும் இடங்களான, டிச.22-ம் தேதி ஆர்.வி.நகர் கிளை, டிச.29-ம் தேதி அண்ணாநகர் 2-வது அவன்யூ, ஜனவரி 5-ந் தேதி சூளைமேடு, ஜன.12ம் தேதி எம்.எம்.டி.ஏ. காலனி, ஜன.19-ம் தேதி ஜாம்பஜார் கிளை மற்றும் ஜன.27-ம் தேதி அசோக்நகர் மேலும் பிப்ரவரி 2-ம் தேதி கொளத்தூர் கிளை மற்றும் பிப்.9-ம் தேதி பிராட்வே ஆகிய பகுதிகளிலும் முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை பெற 7550094090 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு முகாம் பற்றிய கூடுதல் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் படிக்க

வரி சேமிப்பின் மூலம் அதிக பலன் பெறும் வழிமுறைகள்?

அதிக பலனைத் தரும் தேசிய பென்ஷன் திட்டம்!

English Summary: Low Interest Loan: Federal Government Special Loan Camp!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.