இந்தியாவில் பல ஆயிரம் முதலீட்டு திட்டங்கள் என்பது இருந்தாலும், இன்றும் மக்கள் மத்தியில் பிரபலமான திட்டங்களில் ஒன்றாக இருப்பது பிபிஎஃப் எனும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் தான். பொதுவாக இந்த திட்டத்தில் பாதுகாப்பு, வருமானம், வரி சலுகை என பல அம்சங்கள் நிறைந்துள்ளன. இந்த திட்டத்தில் எளிதில் கடன் பெற்றுக் கொள்ளலாம். எனினும் ஒரு நிதியாண்டுக்கு ஒரு முறை தான் கடன் பெற அனுமதிக்கப்படுகிறது. இரண்டாவது முறை இல்லை
3 வருடங்களுக்கு பிறகு கடன்
PPF திட்டத்தில் இணைந்த பிறகு மூன்று ஆண்டுகளுக்கு பிறகே கடன் பெறும் வசதி உண்டு. அதேபோல 6 ஆண்டுகள் முடியும் வரையில் கடன் எடுத்துக் கொள்ளலாம். அதேபோல உங்களது முதலீடு செய்யப்பட்ட முழுமையான தொகையும் கடனாக கிடைக்காது. பிபிஎஃப் தொகைக்கான வட்டி விகிதத்திற்கு மேலாக 1% அதிகமாக இருக்கலாம். இது நீங்கள் திரும்ப செலுத்தும் காலம் வரையில் பொருந்தும். அதேபோல நீங்கள் பிபிஎஃப் திட்டத்திற்கு எதிராக வாங்கிய கடனை மூன்று ஆண்டுகளுக்குள் திரும்ப செலுத்தி விட வேண்டும். இது உங்களுக்கு கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்ட நாளில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்குள் கடனை திரும்ப செலுத்தவில்லை அல்லது பகுதி தொகையினை மட்டுமே நிர்ணயம் செய்த காலக்கெடுவுக்குள் திரும்ப செலுத்தியுள்ளீர்கள் எனில், 1% பதிலாக 6% கட்டணம் அதிகரிக்கலாம். இது உங்களுக்கான கால அவகாசம் முடிந்த அடுத்த நாளில் இருந்து கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். பிபிஎஃப் திட்டத்தினை பொறுத்தவரையில் பணம் எடுத்தாலும் அல்லது கடன் எடுத்தாலும் இரண்டுமே வேறு வேறு ஆப்சன் எனலாம்.
சேமிப்பு
பொதுவாக பிபிஎஃப் திட்டம் என்பது சேமிப்பினை ஊக்குவிக்கும்ம் விதமாக அஞ்சலகத்தினால் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். ஆக எந்த விதத்திலும் முதலீட்டாளர்கள் இடை நிறுத்தக் கூடாது என்ற நிலையிலேயே இதுபோன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
வட்டி குறைவு
வட்டியும் மற்ற கடன்களை காட்டிலும் குறைவு. எல்லாவற்றிற்கும் மேலாக எளிதில் கிடைக்கும். ஆக இதுபோன்ற கடன்கள் என்பது நல்ல விஷயமே. எனினும் இந்த கடனை சரியான நேரத்தில் செலுத்தாவிடில் நீங்கள் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
மேலும் படிக்க
Tree Bike உருவாக்கிய கர்நாடக விவசாயி: அதுவும் குறைந்த செலவில்!
கேஸ் சிலிண்டருக்கு மானியம் உங்களுக்கு வருதா இல்லையா? எப்படி தெரிந்து கொள்வது?
Share your comments