
கேரளாவில் இடுக்கி, வயநாடு, கோட்டயம் மாவட்டங்களில் ஏலக்காய் சாகுபடியாகிறது. இடுக்கி மாவட்டத்தில் மட்டும் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் சாகுபடி நடைபெற்று வருகிறது. தற்போது ஏலத் தோட்டங்களில் பருவ நிலை மாற்றத்தினாலும், போதுமான ஈரப்பதமின்றி விவசாயம் பாதித்தது. இதனை அடுத்து உலக சந்தையில் ஏலக்காயின் விலை உச்சத்தை தொட்டது எனலாம். தற்போது மீண்டும் வரத்து குறைய வாய்ப்பிருப்பதால் விலை உயரும் என எதிர் பார்க்கப் படுகிறது.
கேரளா மாநிலம், தேசிய அளவில் ஏலக்காய் உற்பத்தி, சந்தைப்படுத்துதல் மற்றும் விலை நிர்ணயம் போன்றவற்றை செய்து வருகிறது. பொதுவாக சாகுபடி செய்த 40 முதல் 50 நாட்களுக்குள் காய்களை பறிப்பர். சீசனுக்கு 6 எடுப்பு வரை எடுக்கப் படும். அதில் முதல் மூன்று எடுப்புகளுக்கு மட்டுமே அதிக காய் வரத்து கிடைக்கும். தற்போது 3 வது எடுப்பு முடிவடையும் நிலையில் இருப்பதால் சில நாட்களாக வரத்து குறையத் துவங்கி உள்ளது. இதனை அடுத்து சராசரி விலையில் கிலோவிற்கு ரூ. 300 அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப் படுகிறது. தற்போது அதிகபட்ச விலையாக கிலோவிற்கு ரூ.3,500 வரை விற்கப்படுகிறது.
Share your comments