புனிதமான இடமாகக் கருதப்படும் கோவில்களில், அன்றாடப் பூஜைகள், சடங்குகள் உள்ளிட்டவைத் தவறாமல் செய்யப்படுவது வழக்கம்.
ஆனால் தற்போது கொரோனா 2-வது அலையின் நெருக்கடி நம்மைக் நடுங்க வைத்திருப்பதால், மக்களின் அச்சத்தை நீக்கவும், விழிப்புணர்வை ஏற்படுத்தவும் முயற்சி மேற்கொண்டுள்ள ஒரு கோவில் நிர்வாகம். இந்த முயற்சிக்கு அமோக வரவேற்பும் கிடைத்துள்ளது.
மாஸ்க் அணிந்து அருள்பாலிப்பு (Blessing With wearing the mask)
கொரோனா (Coronavirus) அதிவேகத்தில் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், உத்தரபிரதேசத்தின் எட்டா மாவட்டத்தில் உள்ள துர்க்கை ஆலயத்தில் அன்னை துர்க்கைக்கும் (Goddess Durga) முகக்கவசம் போடப்பட்டுள்ளது.
மாஸ்க் பிரசாதம் (Mask offering)
இங்கு வரும் பக்தர்களுக்கு ‘முகக்கவசம்’ பிரசாதமாக வழங்கப்படுகிறது. இத்துடன், கோவிலுக்குள் கோவிட் வழிகாட்டு நெறிமுறைகளும் கடைபிடிக்கப்படுகிறது.
5 பேருக்கு மட்டுமே அனுமதி (Only 5 people allowed)
அதோடு, ஆலயத்திற்குள் ஒரே நேரத்தில் ஐந்து பக்தர்களுக்கு மேல் அனுமதிக்கப்படுவதில்லை.
சமூக இடைவெளி (Social Distance)
விழிப்புணர்வு நடவடிக்கைகள் குறித்து கோவில் பூசாரி கூறுகையில்,
காலையிலும் மாலையிலும் 'ஆரத்தி' காட்டும் சமயத்தில் சமூக இடைவெளி (Social Distance) விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
கோவிட் விழிப்புணர்வு (Covid Awareness)
ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வருவதால், அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தவே அன்னைக்கு முகக்கவசம் போடப்பட்டுள்ளது. பக்தியோடு வரும் பக்தர்களிடையே கோவிட் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக முகக்கவசங்களை பிரசாதமாக விநியோகித்து வருகிறோம். அதோடு கைகளைச் சுத்தப்படுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம்.
ஆலோசனை மையங்கள் (Counseling Centers)
கோவில் (Temple) வளாகத்தில் பல இடங்களில் கோவிட் -19 ஆலோசனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் ஆலயத்திற்கு வருவதால் பொது சுகாதாரத்திற்கு ஆபத்து ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். அத்துடன், பக்தர்கள் பொறுப்புள்ள குடிமக்களாக நடந்துகொள்வதையும் உறுதிசெய்கிறோம்.
இவ்வாறு பூசாரி கூறினார்.
மேலும் படிக்க...
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு- நாளை முதல் அமல்!
கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் வேகத்தில், உலக அளவில் இந்தியா முதலிடம்
Share your comments