மக்காசோள விவசாயிகள் இனி குறைந்த கட்டணத்தில் தங்களது மக்காச்சோள கையிருப்புகளை குறைந்த கட்டணத்தில் அரசாங்க கிட்டங்கிகளில் 6 மாதம் வரை சேமித்து வைத்து, தேவை அதிகரிக்கும் வேளையில் நல்ல விலையில் விற்பனை செய்யலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழகத்திற்கு கர்நாடகாவிலிருந்து மக்காச்சோளம் வரத் தொடங்கியுள்ளதால், விலை இறங்கு முகமாக உள்ளது. எனவே, மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை சேமித்து அதிக விலைக்கு விற்பனை செய்ய, அரசின் ஆலங்குடி மற்றும் இலுப்பூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் வைத்து மறைமுக ஏலத்தின் மூலம் விற்பனை செய்யலாம்.
முந்தைய மாதங்களில் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளத்தின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து காணப்பட்டது. வெளி மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்வதை அடுத்து விலை குறைந்து வருகிறது. எனவே விவசாயிகள் மக்காச்சோளத்தை 6 மாதங்கள் வரை சேமிப்பு கிடங்குகளில், குவிண்டாலுக்கு நாள் ஒன்றுக்கு 10 பைசா வீதம் செலுத்தி பின் விற்பனை செய்யலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண்துறையை அணுகலாம்.
Share your comments