கொரோனாவால் பலவித இன்னல்களை இந்தியர்கள் பலரும் சந்தித்து வரும் நிலையில், பிணவறை உதவியாளர் வேலைக்கு, பொறியாளர்கள் பலர் விண்ணப்பித்திருப்பது அனைவருக்கும் வேதனையை அளித்துள்ளது.
கொரோனா இன்னல்கள் (Corona tribulations)
தொடர் தாக்குல்களைக் கட்டவிழ்த்துவிட்ட கொரோனாவின் 1,2 அலைகள், இந்தியர்கள் பலரின் உயிரைத், தன் கோரக் கரங்களால், பறித்துச் சென்றது. உயிர்பலி ஒருபுறம் என்றால், இங்கு வாழ்பவர்களுக்கோ பல இன்னல்கள்.
வேலையிழப்பு (Unemployment)
வேலைஇழந்து, நிதிச்சுமையை எதிர்கொண்டதுடன், உறவினர்களைப் பறிகொடுத்து, வாழ்வின் ஒட்டு மொத்த சந்தோஷத்தையும் கொள்ளையடித்துச் சென்றது இந்த கொலைகாரக் கொரோனா.
வேலையில்லாத் திண்டாட்டம் (Unemployment)
இதன் காரணமாக, நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கு வங்காளத்தில் பிணவறை உதவியாளர் பணியிடங்களுக்கு என்ஜினீயர்கள், முதுநிலை பட்டதாரிகள், பட்டதாரிகள் என உயர்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பித்து இருக்கும் பரிதாப நிலை நிகழ்ந்துள்ளது.
8 ஆயிரம் விண்ணப்பம் (8 thousand application)
தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பிணவறை தடயவியல் பரிசோதனைக்கூடத்தில் 6 உதவியாளர் பணியிடங்களுக்கு 8-ம் வகுப்பு முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.
2,200 பட்டதாரிகள் (2,200 graduates)
ஆனால் இந்த பணிக்கு 8 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் சுமார் 100 பேர் இன்ஜினியர்கள், 500 முதுநிலை பட்டதாரிகள், 2,200 பட்டதாரிகள் ஆவர்.பிணங்களைக் கையாளும் பணிக்கு உயர்ந்த கல்வித்தகுதி கொண்டவர்கள் விண்ணப்பித்திருப்பது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் அவர்கள், 84 பெண்கள் உள்பட 784 பேருக்கு மட்டுமே எழுத்து தேர்வுக்கான கடிதம் அனுப்பியுள்ளனர்.
அதிகாரிகள் விளக்கம் (Officials explanation)
ஏற்கனவே இந்த பணியில் இருப்போரின் குடும்பத்தினர் மட்டுமே வழக்கமாக இந்த பணிக்கு விண்ணப்பிப்பார்கள். ஆனால் முதல் முறையாக அதிக கல்வித்தகுதி கொண்ட ஏராளமானோர் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்து இருப்பதாகவும் இது வேலையில்லா திண்டாட்டத்தின் அவலத்தைக் காட்டுவதாகவும் அதிகாரிகள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.
மேலும் படிக்க...
தமிழகத்தில் 20 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு!
வீடுகளில் சூரிய மின்சக்தி அமைக்க மானியம் அறிவிப்பு: மத்திய அமைச்சர் தகவல்
கொரோனா உயிரிழப்பு 21% அதிகரிப்பு: தடுப்பூசி ஒன்றே தீர்வு என WHO அறிவிப்பு!
Share your comments