1. Blogs

நாக பஞ்சமி 2022: சடங்குகள், மற்றும் முக்கியத்துவம்

Deiva Bindhiya
Deiva Bindhiya
Naga Panchami 2022: Rituals, and Significance

நாக பஞ்சமி 2022: நாக பஞ்சமி என்பது இந்தியாவிலும் நேபாளத்திலும் கொண்டாடப்படும் மிகவும் பிரபலமான இந்து பண்டிகையாகும். கடவுள்களில் பாம்புகள் முக்கிய இடத்தைப் பிடிப்பதால், இந்த மங்களகரமான திருவிழாவின் போது பாம்புகள் வழிப்படப்படுகின்றன.

த்ரிக் பஞ்சாகத்தின்படி, ஷ்ராவண மாதத்தில் சுக்ல பக்ஷத்தின் ஐந்தாவது நாளில் பஞ்சமி திதி நாக பஞ்சமி கொண்டாடப்படுகிறது. ஷ்ராவண மாதம் சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் மங்களகரமான மற்றும் புனிதமான மாதமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு, இன்று ஆகஸ்ட் 2, 2022 அன்று கொண்டாடப்படுகிறது.

நாக பஞ்சமி 2022 முக்கியத்துவம்:

இந்து வேதங்களின்படி, நாகர்கள் பாதல லோகத்தில் ஆட்சி செய்து வாழ்கின்றனர். மொத்தம் பன்னிரண்டு பிரபலமான நாகர்கள் உள்ளன, அவை இந்து மதத்தில் வழிப்படப்படுகின்றன. பாம்புகள் தெய்வமாக கருதப்படுகின்றன. மான்சா தேவி அனைத்து நாகர்களுக்கும் தாய் மற்றும் வாசுகியின் சகோதரி, இந்த நாளில் பாம்புகளை வழிபடுபவர்களுக்கு சர்ப்ப பயம் நீங்கும் என்பதும் நம்பிக்கையாகும். இந்து மத சாஸ்திரங்களின்படி, பாம்புகளைக் கொல்லக்கூடாது, அதை வணங்க வேண்டும்.

நாக பஞ்சமி தினத்தன்று விரதம் அனுஷ்டிப்பது, பாம்புக்கடி பயத்தில் இருந்து நிச்சயமான பாதுகாப்பு அளிக்கும் என்பது ஐதீகம். இந்த நாளில், பாம்பு கடவுள்களின் சிலைகள் மற்றும் புகைப்படங்கள், பால், இனிப்புகள், மலர்கள் மற்றும் விளக்குகளால் வழிப்படப்படுகின்றன. பல இடங்களில், உயிருள்ள பாம்புகளுக்கு பக்தர்கள் பால் வழங்குகின்றனர்.

நாக பஞ்சமி 2022 சடங்குகள்:

  • மக்கள் அதிகாலையில் எழுந்திருப்பீர்கள்.
  • நிலக்கரி மூலம் சுவரில் நாகர்களின் படங்களை உருவாக்கவும்.
  • குங்குமம் மற்றும் இனிப்புகளை வழங்குகள்.
  • பாம்புகளை வழிபட பக்தர்கள் பால் மற்றும் பால் பாயசம் வழங்கி வழிப்படுகின்றனர்.
  • பக்தர்கள், இந்த நன்னாளில் சிவன் கோயிலுக்குச் சென்று பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க: IRCTC ரயில்களில் இதற்கு தடை.. இதனால் விலையில் மாற்றம் ஏற்படுமா?

  • ஜாதகத்தில் கால சர்ப் தோஷம் உள்ளவர்கள், கால சர்ப் தோஷ பூஜை செய்ய முடியாதவர்கள், அப்படியானால், அவர்கள் சிவலிங்கத்திற்கு (நாக நாகினிகள் இருக்கும்படியான) வெள்ளி பாம்பு ஜோடியை அர்பணித்து ஒம் நம சிவாயே என்று ஜபிக்க வேண்டும்.

மேலும் படிக்க:

குரங்கு காய்ச்சலால், அவசர நிலை பிரகடனம்

CUET PG 2022 தேதிகள் அறிவிப்பு, செப்டம்பரில் நடைபெறும்| விவரம் இதோ!

English Summary: Naga Panchami 2022: Rituals, and Significance Published on: 02 August 2022, 04:48 IST

Like this article?

Hey! I am Deiva Bindhiya. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.