தேசிய மருத்துவர்கள் தினத்தை (National Doctors day) முன்னிட்டு உயிரை பணயம் வைத்து, உயிர் காக்கும் மருத்துவர்களுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இன்று (ஜூலை 1) தேசிய மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. வைரஸ் தாக்கத்தை அடுத்து கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உயிரைப் பணையம் வைத்து நோயாளியை கொரோனா வைரஸ் (Corona Virus) தாக்கத்தில் இருந்து காப்பாற்ற மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். அவர்களது அர்ப்பணிப்பு மற்றும் சேவையைப் பாராட்டி இந்த தினத்தில் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்:
நோய்வாய்ப்பட்டவர்களுக்கு அவர்களின் திறனுக்கு ஏற்றவாறு சிகிச்சையளிக்க அர்ப்பணித்துள்ள மருத்துவர்களுக்கு மருத்துவர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. கோவிட் நேரத்தில், அவர்களின் சேவை கடமைக்கு அப்பாற்பட்டது.
பிரதமர் மோடி:
பிரதமர் மோடி (PM Modi) தனது டுவிட்டர் பக்கத்தில், ‛மருத்துவர்கள் தினமான இன்று அனைத்து மருத்துவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மருத்துவ உலகில் இந்தியாவின் முன்னேற்றங்கள் பாராட்டத்தக்கவை,' எனப் பதிவிட்டதுடன், கடந்த ஜூன் 27-ல் மருத்துவர்கள் குறித்து அவர் கூறிய கருத்துகள் அடங்கிய வீடியோவையும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலின்:
தன்னலமற்று மக்கள் நலம் காக்கும் மகத்தான பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்படும் மருத்துவர்கள் அனைவருக்கும் 'இந்திய மருத்துவர்கள் நாளில்' வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிறப்பு எளிதாக அமைவதற்கும், இறப்பிலிருந்து உயிர்களைக் காப்பதற்கும் மருத்துவ சேவை அவசியமாகிறது என்பதன் அடையாளமாக இந்த நாள் விளங்குகிறது.
மேலும் படிக்க
சிறு வியாபாரிகளுக்கு ரூ.1.25 லட்சம் கடன்: நிர்மலா சீதாராமன் அதிரடி!
பால் குடிப்பதால் சர்க்கரை நோய் வருவதில்லை! ஆய்வில் தகவல்!
Share your comments