இந்தியாவில் காணும் இடங்களில் எல்லாம் ஓங்கி வளர்ந்திருக்கும் வேப்பம் குச்சி, அமெரிக்காவில் ரூ1800க்கு விற்பனை செய்யப்படுவது, இந்தியர்களை ஆச்சர்யத்தில் உறைய வைத்திருக்கிறது.
ஆலும் வேலும்
ஆலும், வேலும் பல்லுக்குறுதி. நாலும் ரெண்டும் சொல்லுக்குறுதி என்பது ஒரு பழமொழி. அதாவது ஆலமரக் குச்சியும், வேலமரக் குச்சியும் பல் விளக்கும் பற்தூரிகையாகப் பயன்படுத்தினால், பல்லும் பல் ஈறும் வலிமையுடன் இருக்கும் என்பது பொருள்.
இதனைக் கருத்தில்கொண்டே நம் முன்னோர்கள், ஆலமரம் மற்றும் வேப்ப மரக்குச்சிகளை பல்விளக்கப் பயன்படுத்தி, தங்கள் பற்களையும், ஈறுகளையும் வலிமையுடன் வைத்திருந்தனர்.
பலவிதப் பல் பிரச்னைகள் (Various dental problems)
ஆனால், அண்மைகாலமாக இளம் வயதினரையும் வாட்டிவதைக்கும் பிரச்னையாக மாறிவருகிறது பல்சொத்தை உள்ளிட்ட பல் தொடர்பான நோய்கள்.
இளையத் தலைமுறையினரின் இந்தப் பிரச்னைக்கு நிரந்திரத் தீர்வாக, வேப்பங்குச்சியே இருக்கும் என்பதை உணர்ந்த அமெரிக்கர்கள், தற்போது, வேப்பங்குச்சி பயன்பாட்டைக் கணிசமாக அதிகரித்திருக்கிறார்கள்.
குறிப்பாக அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் கெமிக்கல் இல்லாத வாழ்க்கையை நோக்கி மக்கள் நகர்ந்து வருகின்றனர். தன் வாழ்வில் பயன்படுத்தும் பொருட்களில் கெமிக்கல் இல்லாமல் முற்றிலும் இயற்கையான பொருட்களை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் தங்களதுக் குறிக்கோளாகக் கொண்டுள்ளனர்.
காசாக்கும் நிறுவனங்கள்
அமெரிக்க மக்களின் இந்தக் குறிக்கோளைக் காசாக்க நினைத்த வர்த்தக நிறுவனங்கள் தங்கள் இணையதளங்களில் வேப்பங்குச்சிகளையும் விற்பனை செய்து வருகின்றனர். அந்நாட்டில் வேப்பமர வளராதததால் அவர்கள் இந்தியா போன்ற நாடுகளிலிருந்து வேப்பங்குச்சியை இறக்குமதி செய்து பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால், இந்தியாவில் வேப்பமரங்களல் இலவசமாக கிடைக்கும் வேப்பங்குச்சி தற்போது அமெரிக்காவில் ஆன்லைனில் விற்பனையாகி வருகிறது. அமெரிக்க விலையில் 24.63 டாலருக்கு வேப்பங்குச்சிகள் விற்பனையாகின்றன. இதன் இந்திய மதிப்பு ரூ1800 ஆகும். இந்தியாவில் இலவசமாக கிடைக்கும் பொருள் அமெரிக்காவில் ரூ1800க்கு விற்பனையாவது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதிப்பை அறிந்து (Know the value)
அமெரிக்காவில் வேப்பங்குச்சியின் மதிப்பை அறிந்து அதை மக்கள் பயன்படுத்த துவங்கிவிட்ட நிலையில் இந்தியாவில் அதன் பயன்பாடு குறைந்தது வருந்தத்தக்கது தான்.
பல் ஆரோக்கியம் (Dental health)
ஒருகாலத்தில், இந்திய மக்கள் பெரும்பாலும் வேப்பங்குச்சி அல்லது ஆலங் குச்சிகளை வைத்தே பற்களை தேய்தனர். அதில் உள்ள மருத்துவகுணங்களை பற்களை வெண்மையாக வைத்திருந்தது. அதே நேரத்தில் ஆரோக்கியமாகவும் வைத்திருந்தது.
இந்நிலையில் தற்போது பேஸ்ட் பிரஷ் மக்கள் மத்தியில் பயன்படுத்த துவங்கியதும், வேப்பம் குச்சி மற்றும் ஆலங்குச்சியின் பயன்பாடு குறைந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
Share your comments