பெங்களூர் நகரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று சிம்பிள் எனர்ஜி (Simple Energy). சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Simple One E-Scooter) இந்த நிறுவனத்தின் தயாரிப்புதான். இந்த சூழலில் சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தற்போது சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மேம்படுத்தியுள்ளது. சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஒரு பேட்டரி பொருத்தப்பட்ட மாடலின் ரேஞ்ச் (ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் பயணிக்கும் தொலைவு) 236 கிலோ மீட்டர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் நடைமுறை பயன்பாட்டில், அதாவது நாம் வழக்கமான சாலைகளில் ஓட்டும்போது 200-205 கிலோ மீட்டர்கள் மட்டுமே ரேஞ்ச் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புது மாடல் அறிமுகம் (New Model Release)
சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஒரு பேட்டரி பொருத்தப்பட்ட மாடலின் விலை 1.09 லட்ச ரூபாய் ஆகும். இது எக்ஸ் ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழலில், சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெரிய 2 பேட்டரிகள் பொருத்தப்பட்ட மாடல் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடலின் ரேஞ்ச் 300 கிலோ மீட்டர்களுக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 300 கிலோ மீட்டர்களுக்கும் அதிகமான தூரம் பயணிக்க முடியும். ஒரு பேட்டரி மாடலை போலவே, இரண்டு பேட்டரி பொருத்தப்பட்ட மாடலிலும், 2 பேட்டரிகளையும் கழற்றி மாற்ற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொலைதூர பயணங்களுக்கு ஏற்றவை அல்ல என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. நகர பகுதிகளில் ஓட்டுவதே கூட சிரமம்தான் என பலரும் நினைக்கின்றனர். பெரும்பாலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ரேஞ்ச் மிகவும் குறைவாக இருப்பதுதான் இதற்கு காரணம்.
டெலிவரி பணிகள் (Delivery)
சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் வரும் ஜூன் மாதத்தில் இருந்து தொடங்கும் என சிம்பிள் எனர்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது. சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி (சுதந்திர தினம்) அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு சுமார் 9 மாதங்கள் கழித்து சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள் தொடங்கப்படவுள்ளன. இதற்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ளதால் வாடிக்கையாளர்களின் ஆவல் அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க
தொழில் துறையினருக்கு உதவும் வகையில் அரசின் புதிய திட்டம்!
அதிக வட்டி கிடைக்கும் அஞ்சல் நிலையத்தின் முத்தான 3 சேமிப்புத் திட்டங்கள்!
Share your comments