நம்முடைய செல்போனுக்குப் பயன்படுத்தும், இயர்பட்ஸை சார்ஜ் செய்யாத வகையில், புதிய இயர்பட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுத்தியுள்ளது, ஸ்வீடனைச் சேர்ந்த 'அர்பனைஸ்டா' நிறுவனம். அதாவது, சூரிய ஒளியை பயன்படுத்திக் கொள்ளும் வகையிலான 'சார்ஜிங் கேஸ்' உடன் கூடிய இயர்பட்ஸ் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
அர்பனைஸ்டா போனிக்ஸ்' எனும் பெயரில், புதிதாக ஒரு ட்ரூ ஒயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்சை இந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த இயர்பட்சுக்கான சார்ஜிங் கேஸ், சூரிய ஒளியை பயன்படுத்தி சார்ஜ் பெற்றுக்கொள்ளும் என்பது முக்கியமான அம்சமாகும்.
சார்ஜிங் வேண்டாம்
இதனால், சார்ஜிங் கேஸை நாம் தனியாக சார்ஜ் போடத் தேவையில்லை.
எப்போதெல்லாம் அதற்கு ஒளி கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அதுவாகவே சார்ஜை ஏற்றிக்கொள்ளும். இதில், 'டச் கன்ட்ரோல் வாய்ஸ் அசிஸ்டென்ட்' போன்ற வசதிகளும் இடம்பெற்றிருக்கின்றன. 40 மணி நேரம் தாங்கும் பேட்டரி வசதியும் உள்ளது.
தரச்சான்றிதழ்
மேலும், ஹைபிரிட் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன்' தொழில்நுட்ப வசதி இருப்பதால், எளிதாக சுற்றுப்புற சப்தங்களை கட்டுப்படுத்திக் கொள்ள இயலும். இதில் யு.எஸ்.பி., டைப் சி போர்ட்' சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் நீர்புகாமலிருக்க 'ஐ.பி.எக்ஸ்., 4 தரச்சான்றிதழும் பெற்றுள்ளது.
இந்த இயர்பட்ஸ், அக்டோபர் மாத வாக்கில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தோராய விலை: 11,800 ரூபாய்.
மேலும் படிக்க...
தேசத்தின் சிறந்த முதல்வர்கள் பட்டியல் - 3ம் இடத்தில் மு.க.ஸ்டாலின்!
Share your comments