1. Blogs

மத்திய அரசின் அவசரகால கடன் திட்டத்தில் சுகாதாரத் துறையும் சேர்ப்பு!

KJ Staff
KJ Staff
Emergency Loan

Credit : Times Now

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், சுகாதார துறையை சேர்ந்த நிறுவனங்களும் இனி கடன் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.

அவசர கால கடன் உதவி

கடந்த ஆண்டு கொரோனா (Corona) பாதிப்பு அதிகரித்த நிலையில் குறு, சிறு, நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 3 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, அவசர கால கடன் உத்தரவாத திட்டத்தை (Emergency loan guarantee scheme) நிதியமைச்சகம் அறிவித்தது. அதன்படி, குறிப்பிட்ட சில துறைகளை சார்ந்த நிறுவனங்களுக்கு கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது சுகாதார துறையும் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இத்துறையை சேர்ந்த நிறுவனங்களும், இனி இத்திட்டத்தின் கீழ் கடன் (Loan) பெற்றுக் கொள்ளலாம். அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், நிறுவனங்கள் பிணை எதுவும் இன்றி கடன் பெற்றுக்கொள்ள முடியும். அரசே வங்கிகளுக்கு கடனுக்கான உத்தரவாதத்தை வழங்கிவிடும்.

அவசர கால கடன்கள், 12 பொதுத் துறை வங்கிகள், 24 தனியார் துறை வங்கிகள், 31 வங்கி சாரா நிதி நிறுவனங்கள் ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த கடன் உத்தரவாதத்தை, 26 துறைகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு வழங்க, கே.வி.காமத் குழு (KV Comet Group) பரிந்துரை செய்திருந்தது. அதன் அடிப்படையில் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் மாதத்துடன் இந்த திட்டம் முடிவடைய இருந்த நிலையில், ஜூன் 30ம் தேதி வரை நீட்டிப்பதாக அரசு அறிவித்தது. தற்போது சுகாதார துறையும் சேர்க்கப்பட்டுள்ளது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

ஓய்வு காலத்தில் மாதம் ரூ.2 லட்சம் சம்பாதிக்க அருமையான திட்டம்!

வங்கிகளை விட EPFO-வில் அதிக வட்டி! வேலை இழந்தால் 75% ரிட்டன்!

English Summary: Of the Central Government Health sector included in emergency loan scheme!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.