1. Blogs

பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரி வேலை: உடனே விண்ணப்பியுங்கள்!

R. Balakrishnan
R. Balakrishnan

Officer job in Punjab National Bank: Apply now!

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் தற்போது வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காகவே காத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு இது நல்ல செய்தியாக அமையும். பஞ்சாப் நேஷனல் வங்கியில், சிறப்பு அதிகாரிகளுக்கான பணியிடங்கள் காலியாக இருப்பதை அடுத்து, அதனை நிரப்ப தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று, இந்த வங்கி அறிவித்துள்ளது.

மொத்த பணியிடங்கள் - 145

பணி மேலாளர் (ரிஸ்க்) - 40
பணி மேலாளர் (கிரடிட்) - 100

தகுதிகள் - கணக்கு தணிக்கையாளர் (Chartered Accountant) அல்லது ஏதாவது ஒரு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்று, நிதியியல் துறையில் எம்பிஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு - 01/01/2022 தேதியின் படி, கருவூலப் பணிக்கு 25 வயது முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும். மற்ற பணியிடங்களுக்கு 25 வயது முதல் 35 வயதுக்குள் இருத்தல் அவசியம்.

தேர்வு முறை - எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில், தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எழுத்து தேர்வு நடைபெறும் மையங்கள் - சென்னை, வேலூர், மதுரை, கோவை, சேலம், நாகர்கோவில், தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் எழுத்துத் தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் - தேர்வுக் கட்டணமாகபொதுப் பிரிவினருக்கு ரூ. 850 மற்றும் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கட்டணத்தை இணைய வழியில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை - விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் www.pnbindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில், இணையம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் - 07/05/2022

மேலும் பல தகவல்களை அறிய. www.pnbindia.in/Recruitments/aspx என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

ONGC வேலைவாய்ப்பு: 3,614 பணியிடங்களுக்கு உடனே விண்ண்ப்பியுங்கள்!

வங்கி சேமிப்புக் கணக்கை பராமரிக்கும் பாதுகாப்பான வழி முறைகள்!

English Summary: Officer job in Punjab National Bank: Apply now!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.