1. Blogs

ஓலாவின் முதல் எலெக்ட்ரிக் கார்: சிறப்பம்சங்கள் இதோ!

R. Balakrishnan
R. Balakrishnan
Ola's First Electric Car

ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் கார் குறித்த விவரங்களை நேற்று (ஆகஸ்ட் 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டது. நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், மக்கள் மெல்ல மெல்ல எலெக்ட்ரிக் வாகனங்கள் பக்கம் திரும்புகின்றனர். ஏற்கனவே பல்வேறு நிறுவனங்களின் இவி கார்களும், பைக், மற்றும் ஸ்கூட்டர்களும் வாகனச் சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் காரை அந்நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

ஓலா எலக்ட்ரிக் கார் (Ola Electric Car)

ஓலா எலக்ட்ரிக் கார் வரும் 2024ம் ஆண்டு விற்பனை வரும் என அந்நிறுவனத்தின் சிஇஓ பாவிஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். ஓலாவின் முதல் எலக்ட்ரிக் கார் செடான் டைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது இந்த எலக்ட்ரிக் காரின் உயரம் குறைவாகவும், கார் நன்கு தாழ்ந்ததாகவும் இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் காரை பற்றிய முதல் டீசர் வீடியோவை வெளியிட்டது. ஆனால், அந்த டீசரில், காரின் தோற்றம் வெளிப்படையாக காட்டப்படவில்லை என்றாலும், U-வடிவ ஹெட்லேம்ப்கள் மற்றும் தட்டையான ஸ்ட்ரிப் உடன் முற்றிலும் அட்வான்ஸான ஸ்டைலில் முன்பக்கத்தை இந்த எலக்ட்ரிக் செடான் கார் கொண்டிருந்தது.

முன்பக்கத்திலும், பின்பக்கத்திலும் ஹெட்லைட் & டெயில்லைட்கள் மெல்லிய விளக்கு பார்-ஆக காரின் முழு அகலத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ளன. ஓலாவின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களான எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ தனித்துவமான ஸ்டைலால் பலத்தரப்பட்ட மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதேபோல் இந்த எலக்ட்ரிக் காரும் அனைவரையும் கவர்ந்திழுக்கக்கூடிய தோற்றத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் ரூஃப் முற்றிலும் கிளாஸால் வடிவைக்கபட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் ( Special Features)

இதன் சிறப்பம்சங்கள் பற்றி பார்த்தால், ஓலா நிறுவனம் ஏற்கனவே தெரிவித்தது போல, தனது முதல் எலக்ட்ரிக் கார் சுமார் 500+ கிமீ ரேஞ்ச் உடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதாவது இந்த எலக்ட்ரிக் காரின் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிக் கொண்டு அதிகப்பட்சமாக 500கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு பயணிக்க முடியுமாம். அதுபோக இந்த கார் 0-100 கி.மீ வேகத்தை வெறும் 4 நொடியில் எட்டிபிடிக்கும். மூவ் ஓஎஸ் தளத்தில் இயங்கக் கூடியதாகும்.

இந்த ஓலா எலெக்ட்ரிக் காரின் விலை நிலவரம் குறித்த முழுமையான தகவல் வெளியாகவில்லை. ஆனால் மற்ற நாடுகளை விட இந்தியாவில் குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை தோராயமாக, ரூ.15-20 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என தெரிகிறது.

மேலும் படிக்க

ரூ.10,000 முதலீடு செய்தால் போதும்: ரூ. 60 லட்சம் ரிட்டர்ன்!

ஒரே சார்ஜில் 131 கி.மீ ஓடும் Ola S1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்!

English Summary: Ola's first electric car: Here are the highlights! Published on: 16 August 2022, 07:07 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.