2020ம் ஆண்டில் நான்கில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை
என, ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெப்) தெரிவித்துள்ளது.
பாதுகாப்பான குடிநீர் இல்லை
யுனிசெப் நிர்வாக இயக்குநர் ஹென்றிட்டா போர் கூறுகையில், 'கோவிட் தொற்றுநோய்க்கு முன்பே, கோடிக் கணக்கான குழந்தைகள் மற்றும் குடும்பங்கள் சுத்தமான குடிநீர் (Drinking Water), பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் கைகளை கழுவதற்கான இடம் கூட இல்லாமல் உள்ளனர். 2020ம் ஆண்டில் நான்கில் ஒருவருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை. கோவிட் தொற்று தொடங்கிய போது, உலகளவில் 10ல் 3 பேர் வீடுகளில் சோப்பு மற்றும் தண்ணீரால் கைகளை கழுவவில்லை என்பது தெரியவந்து உள்ளது' என்றார்.
உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்து உள்ளதாவது: கோவிட் (Covid) பெருந்தொற்று மட்டுமின்றி பிற தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று, கை கழுவுதல். ஆனால், கடந்த ஆண்டு, உலகம் முழுவதும் உள்ள கோடிக் கணக்கான மக்களுக்கு நம்பகமான, பாதுகாப்பான குடிநீர் கூட கிடைக்கவில்லை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. சுகாதார நடவடிக்கைகளில் உலக நாடுகளிடம் முன்னேற்றங்கள் உள்ளன. ஆனால், தற்போதைய பெருந்தொற்று சூழலில் இது போதாது. ஆப்பிரிக்க நாடுகள் சுகாதார கட்டமைப்பில் மிகவும் பின்தங்கியுள்ளன.
சுகாதார பாதிப்பு
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு வீடுகளில் சுத்தமான குடிநீர், சுகாதாரம் மற்றும் சுகாதார சேவைகளின் முன்னேற்றம் நான்கு மடங்காக அதிகரிக்காவிட்டால், 2030ல் சுகாதார பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம். இதனால் சுத்தமான நீர், சுகாதார கட்டமைப்புகள் போன்றவற்றில் முதலீடு செய்வது உலகளாவிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க
3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற முடியாது: மத்திய அரசு அறிவிப்பு!
கொரோனாவை கட்டுப்படுத்த செப்டம்பர் மாதத்திற்குள் 10% மக்களுக்கு தடுப்பூசி: உலக சுகாதார அமைப்பு!
Share your comments