சந்தையில் விற்கப்படும் பொருட்களை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என்ற மோகம் நம்மில் பலரை வாட்டி வதைக்கிறது. சந்தைக்கு எப்போதேல்லாம் புதிய ரகங்கள் வருகிறதோ அதை முதலாவதாக வாங்கிப் பயன்படுத்துவதில் அத்தனை ஆர்வம்.
ஆய்வில் தகவல் (Information in the study)
அந்த வகையில் தாலேட்ஸ் என்ற ராசாயனத்தாலான பொருட்களை பயன்படுத்தியதால் அமெரிக்காவில் ஆண்டுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பதாக நியூயார்க் பல்கலை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
நியூயார்க் பல்கலைக்கழகத்தின் கிராஸ்மேன் ஸ்கூல் ஆப் மெடிசின் நடத்திய தாலேட்ஸ் ரசாயனம் குறித்து ஆய்வு முடிவுகள் சுற்றுச்சூழல் மாசுபாடு என்ற ஆய்வு இதழில் வெளியாகியுள்ளன.
இந்த ஆய்வை முன்னின்று நடத்திய லியோனார்டோ ட்ரசாண்டே தெரிவித்ததாவது:
லேட்ஸ் (phthalates) என்ற ரசயானத்தை பயன்படுத்தி நெகிழி, உணவைப் பதப்படுத்தும் பிளாஸ்டிக் கொள்கலன்கள், பொம்மை, ஆடை, ஷாம்பு உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன.
பலவித நோய்கள் (Various diseases)
இந்த பொருள்களின் வாயிலாக இந்த நச்சுப்பொருள் உடலில் சென்று உடல் பருமன், நீரிழிவு, இதய நோய் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. மேலும் உடலில் உள்ள நாளமில்லா அமைப்பைக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதுவே ஹார்மோன் இடையூறு என்று அழைக்கப்படுகிறது.
முன்கூட்டிய மரணம் (Premature death)
அதிகமாக தாலேட்சை பயன்படுத்துவதற்கும் முன்கூட்டியே மரணிப்பதற்கும் நிறைய தொடர்புகள் இருப்பது இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. குறிப்பாக, இருதய நோய் இதன் காரணமாக அதிகளவில் உயிரிழந்திருக்கின்றனர்.
நாங்கள் நினைத்ததை விட இந்த ரசாயனம் சமூகத்தில் ஏற்படுத்தும் மரணங்கள் அதிகமாக இருக்கின்றன. அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழக்கின்றனர்.
கட்டுப்படுத்துவது கட்டாயம்
எனவே, நச்சு நிறைந்த தாலேட்சின் பயன்பாட்டை கட்டுப்படுத்தினால் அமெரிக்கர்களின் உடல் நலத்தையும் பொருளாதார நிலையைும் காப்பாற்ற முடியும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க...
Share your comments