1. Blogs

ஆர்டர் செய்தது பரோட்டா- வந்தது பாம்புத்தோல்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Ordered by parota- came snake skin!

கேரளாவில், பரோட்டா ஆர்டர் செய்தவருக்கு, பார்சலில் பாம்புத்தோல் வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்ததை சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. உணவகங்கள் நிர்வாகத்தின் கவனக்குறைவே இத்தகைய சம்பவங்களுக்கு அடிப்படையாக அமைந்துவிடுகிறது

கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட மாணவி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த சம்பவத்தின் பரபரப்பு ஓய்வதற்குள் திருவனந்தபுரம் அருகே நெடுமங்காடு பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வாங்கி சென்ற பரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியை சேர்ந்தவர் பிரியா. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டாவாங்கினார். வீட்டுக்கு கொண்டு சென்று அதனை பிரித்து பார்த்தார். அதில் அவருக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது.

என்னவென்றால், பரோட்டாப்  பார்சலை கட்டி இருந்த காகிதத்தில் பாம்பு தோல் இருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் இதுபற்றி நெடுமங்காடு போலீசாருக்கும், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பரோட்டா பார்சலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும் ஓட்டலுக்கும் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து உணவு பொருட்களை விநியோகம் செய்வதில் அலட்சியமாக இருந்ததாகவும், பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடிக்கவில்லை என குற்றம்சாட்டியும் அந்த ஓட்டலுக்கு சீல் வைத்தனர். இதற்கிடையே பரோட்டா பார்சலில் பாம்பு தோல் இருந்ததை சிலர் செல்போனில் படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

ஏற்கனவே திருவனந்தபுரத்தில் பரோட்டா, பிரியாணி சாப்பிட்டு சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது பாம்புத் தோல் விவாகரம், ஹோட்டல் பிரியர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

மேலும் படிக்க...

வாத நோய்க்கு வித்திடும் உருளைக்கிழங்கு- மக்களே உஷார்!

டீக்கடைகளில் நீங்கள் அருந்தும் தேநீர் தரமானதா? கண்டுபிடிப்பது எப்படி?

English Summary: Ordered by parota- came snake skin! Published on: 07 May 2022, 10:07 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.