
நாடு முழுவதும், ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால் பெரும்பாலான பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் சிக்கல் நிலவுகிறது. நெல் அறுவடை செய்துவரும் விவசாயிகள் தற்போது, விற்பனை செய்வதோ அல்லது சேமித்து வைப்பதோ இயலாத காரியம் என்பதால் அவர்கள் தங்களது நெல்லை சேமித்து வைத்து, பின்னர் விற்பனை செய்ய அந்தந்த மாவட்டங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை அணுகலாம். இதில், 30 நாட்கள் வரை சேமித்து வைத்துக் கொள்ளலாம். மேலும் அரசின் இச்சலுகையை பெற விரும்புபவர்கள் தங்கள் பகுதியை சார்ந்த கிராம நிர்வாக அலுவலரின் பரிந்துரை சான்று பெற்று, சம்பந்தப்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூட அலுவலர்கள் நாடலாம்.
Share your comments