ஓய்வூதியதாரர்களுக்கான பென்சன் மற்றும் குடும்ப பென்சன் தொகை உயர்த்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது, மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், அகவிலைப்படி 34 சதவீதமாக உயருவதால், ஓய்வூதியத் தொகையும் கணிசமாக அதிகரிக்கும்.
இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை யொட்டி தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்பட்ட சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர், பென்சன் உயர்வு உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதன்படி, விடுதலை போராட்ட தியாகிகளுக்கான பென்சன் தொகை 18,000 ரூபாயில் இருந்து 20,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், விடுதலை போராட்ட தியாகிகளுக்கான குடும்ப பென்சன் தொகை 9000 ரூபாயில் இருந்து 10000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
34% ஆக
இதுபோக, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 31%-இல் இருந்து 34% ஆக உயர்த்தப்பட்டுள்ளது என முதல்வர் அறிவித்துள்ளார். இதனால் தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்களுக்கான பென்சன் தொகையும் உயரும். இதனால் லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களும், குடும்ப ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள்.
மேலும் படிக்க...
தேசத்தின் சிறந்த முதல்வர்கள் பட்டியல் - 3ம் இடத்தில் மு.க.ஸ்டாலின்!
Share your comments