ஊரடங்கு உத்தரவு காரணமாக கால்நடை வளர்ப்பவர்கள், செல்ல பிராணி வளர்ப்பவர்கள் மருத்துவ உதவி, ஆலோசனை பெறுவதில் சிரமம் இருப்பதால் கால்நடை விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று, சிகிச்சை உட்பட தடுப்பூசிகள் அளித்து வருகிறார்கள் கால்நடை மருத்துவர்கள்.
கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், மருந்தகங்களுக்கு செல்வதிலும் சிரமம் இருப்பதால் கால்நடை மருத்துவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் வீட்டிற்கே சென்று செயற்கை கருவூட்டல் பயிற்சி, தடுப்பு பூசி ஆகியன அளித்து வருகின்றனர். இது குறித்து, திருத்தணி கால்நடை உதவி இயக்குனர் கூறுகையில், ஊரடங்கால் அனைத்து கால்நடை மருந்தகங்கள் மற்றும் கிளை நிலையங்கள் காலை, 8.00 மணி முதல், மதியம், 12.30 மணி வரை மட்டுமே செயல்படுகிறது. மேலும் அவசர உதவி எனில் இருப்பிடங்களுக்கே சென்று சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றார்.
கால்நடை விவசாயிகள் மற்றும் செல்ல பிராணி வளர்ப்பவர்கள் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தேவைப்பட்டால் கால்நடை உதவி இயக்குனர், 98945 56477 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். அருகிலிருக்கும் கால்நடை மருந்தகம் மற்றும் கிளை நிலையத்தில் இருந்து, மருத்துவரோ அல்லது ஆய்வாளரோ அனுப்பி வைக்கப்படுவர் என தெரிவித்தார்.
Share your comments