1. Blogs

பெண் பயணிகளுக்காக பிங்க் பஸ்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Pink bus for female passengers!

இலவச பயணம் மேற்கொள்ளும் பெண் பயணிகளுக்காக பிங்க் நிற பேருந்துகள் விரைவில் தமிழகம் முழுவதும் இயக்கப்பட உள்ளது. பெண்களின் வசதியைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. 

சென்னை உள்ளிட்ட நகரங்களில் இயக்கப்படும் சாதாரண பேருந்துகளில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். திமுக அரசின் இந்தத் திட்டத்திற்கு பெண்களிடையே அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 

60%மாக அதிகரிப்பு

அதன்பிறகு மாநகர போக்குவரத்து கழகங்களில் பெண் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டுக்கு முன்பு வரை மாநகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களின் எண்ணிக்கை 40 சதவீதமாக இருந்தது. அது தற்போது 60 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.

ரூ.1600 கோடி

கடந்த 1 வருடத்தில் மட்டும் 132 கோடிக்கும் அதிகமானோர் இந்த திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர். இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த தமிழகத்தில் உள்ள போக்குவரத்து கழகங்களுக்கு அரசு ரூ.1600 கோடியை மானியமாக அளித்துள்ளது. பெண்கள் இலவச பயணம் செய்யும் பேருந்துகளில் முன்பக்க கண்ணாடியில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும். அதை பார்த்தே பெண்கள் அதில் ஏறி செல்வது வழக்கம்.

அடையாளம் காண

ஆனால் சில பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டப்படாமல் உள்ளது. சில ஸ்டிக்கர்களை தூரத்தில் நின்று படிக்க முடியாத நிலை உள்ளது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் மாநகர போக்குவரத்து கழகம் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் சாதாரண பேருந்துகளை 'பிங்க்' நிறத்தில் மாற்றியுள்ளது. இந்த பேருந்துகள் அறிமுகத்தின் மூலம் பெண்கள் குழப்பம் இன்றி தூரத்தில் இருந்தே பேருந்துகளை பார்த்து அதில் ஏறி செல்லலாம். மாநகர போக்குவரத்து கழகத்தின் இந்த 'பிங்க்' நிற பேருந்துகள் அடுத்த வாரம் சில வழித்தடங்களில் சோதனை ஓட்டத்தை தொடங்குகிறது.

அதற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அனைத்து இடங்களுக்கும் அவை விரிவுபடுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3,300 பேருந்து சேவைகளில் பாதி சாதாரண பேருந்து சேவைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை!

மனைவியை ஏமாற்ற பாஸ்போர்ட் கிழிப்பு - கைது செய்த போலீஸார்!

English Summary: Pink bus for female passengers! Published on: 14 July 2022, 07:25 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.