சிங்கம், புலி, கரடி என வனவிலங்குகளை வளர்க்க வேண்டும் என ஆசைப்படுபவரா நீங்கள்? அப்படியானால் உங்களுக்கு அப்படியொரு நல்ல வாய்ப்பை வழங்குகிறது வண்டலூர் பூங்கா.
உயிரியல் பூங்கா (Zoo)
வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காகவே அரசின் சார்பில், வனவிலங்குகள் பூங்கா, வனவிலங்குகள் சரணாலயம் ஆகியவற்றை அமைத்து நிர்வகிக்கப்பட்டு வருகின்றன.
கொரோனாவால் பாதிப்பு
ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக வாட்டி எடுத்தக் கொரோனா, இந்த வனவிலங்குகளின் வாழ்விலும் புயலைப் புரட்டிப்போட்டன. இதன் விளைவாக சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள உயிரியல் பூங்கா பெரும்பாலும் பொருளாதார தன்னிறைவு கொண்டதாக இருந்தாலும், கொரோனா பெருந்தொற்று காரணமாக குறைந்தபட்ச பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு கூட சிக்கல் எதிர்கொள்ளப்பட்டது.
இதனைக் கருத்தில் கொண்டு, வண்டலூர் பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 182 இனங்களில் உள்ள 2382 விலங்குகள் இயற்கையில் உள்ளது போன்ற சூழலில் சிறந்த பராமரிப்புடன் வளர்க்கப்பட்டு வருகின்றன. பூங்காவில் உள்ள விலங்குகள் மற்றும் பார்வையாளர்களுக்கான பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் இல்லை. ஒரு வலுவான பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை கையாள்கிறோம்.
பூங்கா மூடல் (Park closure)
கொரோனாத் தொற்று நோயினால் உயிரியல் பூங்கா கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 24 வரை சுமார் 8 மாதங்கள் மூடப்பட்டு இருந்தது.
இந்த உயிரியல் பூங்கா பெரும்பாலும் பொருளாதார தன்னிறைவு கொண்டதாக இருப்பினும், கொரோனா பெருந்தொற்று காரணமாக குறைந்தபட்ச பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்கு கூட சிக்கல் எதிர்கொள்ளப்பட்டது.
ஓய்வெடுக்கக் கொட்டகைகள் (Rest sheds)
இந்த நிலையில் மகிந்திரா சிட்டியில் உள்ள தனியார் நிறுவனம், உயிரியல் பூங்காவிற்கு விலங்கு தகவல் பலகைகளைப் புதுப்பிக்கவும், விலங்குகளின் இருப்பிடங்களில் விலங்குகள் ஓய்வெடுக்க கொட்டகைகள், சோலார் தெரு விளக்குகள், 14 பேர் அமரும் பேட்டரி வாகனங்கள் இரண்டும் ரூ.1.25 கோடி மதிப்பீட்டில் வழங்கி உள்ளது.
இந்த வசதிகள் உயிரியல் பூங்கா விலங்குகளுக்கு கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கு பெரிதும் உதவிகரமாக உள்ளது.
தத்தெடுப்பு (Adoption)
அதேபோல், நடிகர் சிவகார்த்திகேயன் விஷ்ணு என்ற சிங்கத்தையும் பிரக்ருதி என்ற யானையையும் 6 மாதத்திற்கு தத்தெடுத்துள்ளார்.
எனவே பொதுமக்கள் மற்றும் பெருநிறுவனங்கள் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை தத்தெடுத்து விலங்குகள் பாதுகாப்புக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
பண்டிகை காலம் வந்தாச்சுங்கோ- வீட்டுக் கடன் வாங்க வங்கிகள் தரும் ஆஃபர் லிஸ்ட்!
ரூ.1800க்கு விற்பனையாகும் வேப்பங்குச்சி- அமெரிக்காவில் நடக்குது இந்தக் கொடுமை!
Share your comments