போஸ்ட் ஆபீஸின் கீழ் செயல்படும் இந்த இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியில் (India Post Payments Bank) பலரும் சேமிப்பு கணக்கு மற்றும் நடப்பு கணக்குகளை தொடர்கின்றனர். இந்நிலையில் சமீபகாலமாக இந்த வங்கி வாடிக்கையாளர்களுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தியை பார்க்க முடிகிறது. இந்நிலையில் ஏற்கெனவே ஜனவரி 1 மற்றும் பிப்ரவரி 1 முதல் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வருவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது மற்றொரு அப்டேட்டும் வெளியாகியுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.
கூடுதல் கட்டணம் (Extra Charges)
வரும் மார்ச் 5 முதல் போஸ்ட் பேமெண்ட் வங்கியின் சேமிப்புக் கணக்குகளுக்கான விதிமுறை மாறுகிறது. இதன்படி, சேமிப்புக் கணக்குகளை மூடுவதற்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் சேமிப்புக் கணக்கை மூட வேண்டுமெனில் அதற்கு தனியாக 150 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் சேர்த்து செலுத்த வேண்டும். இந்த புதிய மாற்றம் டிஜிட்டல் சேமிப்புக் கணக்குகளுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு,போஸ்ட் ஆபீஸ் வங்கி ஒரு வரம்புக்கு மேல் பணத்தை எடுப்பதற்கும் டெபாசிட் செய்வதற்கும் கட்டணம் செலுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது. வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை எடுக்கும்போதும் குறைந்தபட்சம் ரூ.25 செலுத்த வேண்டும் எனவும் கூறியிருந்தது. இந்த புதிய மாற்றம் ஜனவரி 1, 2022 ஆம் ஆண்டு முதல் அமலுக்கு வந்தது. வரம்பை விட அதிகமாக டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
வட்டி விகிதம் (Interest Rate)
அதே போல், சேமிப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க் அறிவித்திருந்தது. ரூ.1 லட்சம் வரையிலான சேமிப்புகளுக்கு வட்டி விகிதம் 2.25 சதவீதமாக இருக்கும். அதேபோல, ரூ.1 லட்சத்துக்கு மேல் ரூ.2 லட்சம் வரையிலான டெபாசிட்களுக்கு வட்டி விகிதம் 2.50 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
Share your comments