அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படும் சேமிப்புத் திட்டங்கள் பொதுமக்களுக்குப் பெரிதும் பயனளிப்பவையாக உள்ளன. இது ஆபத்து இல்லாத முதலீடாகவும் கருதப்படுகிறது. வங்கி கணக்குகளை போலவே இதிலும் இணையதள வங்கிச்சேவை மற்றும் செக் புக் போன்ற சேவைகளும் கிடைக்கும். அஞ்சல் சேமிப்பில் இருக்கும் பல பென்சன் திட்டங்கள், பிக்சட் டெபாசிட் திட்டங்கள், நீண்ட கால சேமிப்பு என பல ஸ்கீம்களில் ஜாயிண்ட் அக்கவுண்ட் பங்கு அதிகம் உள்ளது. அதனாலே பலரும் தனிக் கணக்கு மற்றும் இணைப்பு கணக்கு இரண்டையும் பராமரிக்கின்றனர். அந்த வகையில் இன்று இந்திய தபால் துறையின் கீழ் இயங்கி வரும் இந்தியா போஸ்ட் பேமண்ட்ஸ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் புதிய சேவை பற்றி தான் பார்க்க போகிறோம்.
காப்பீடு வசதி
இனிமேல் இந்தியா பேமண்ட்ஸ் வங்கி வாடிக்கையாளர்கள், அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் சுகாதாரக் காப்பீடு மற்றும் மோட்டார் காப்பீடு வாங்கிக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி உங்கள் வீட்டுக்கே நேராக வந்து வழங்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு. சுகாதார மற்றும் மோட்டார் இன்சூரன்ஸ் சேவைகளை பெற காகித வாயிலான விண்ணப்பங்கள் எதுவும் தேவையில்லை. உடனடியாக இச்சேவையை பெற்றுக்கொள்ளலாம்.
இதன் மூலம், நாடு முழுவதும் இருக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் தபால் அலுவலகங்கள் வாயிலாக சுகாதாரக் காப்பீடு மற்றும் மோட்டார் காப்பீடு சேவைகளை பெற முடியும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை போஸ்ட் ஆபீஸ் வங்கி மேலாளர்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்தில் சேர்ந்தவர்களுக்கு வீட்டுக்கே நேரடியாக ஆவணங்கள் டெலிவரி செய்யப்படும்.
கவரேஜ்
அதே போல் கார் இன்சூரன்ஸில் இயற்கை சீற்றங்களுக்கான கவரேஜும் உண்டு எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழை, புயல் போன்ற இயற்கை பேரிடர்களில் காருக்கு பாதிப்பு ஏற்பட்டால் நீங்கள் இன்சூரன்ஸில் கவர் செய்து கொள்ளலாம். இதுக் குறித்த கூடுதல் விவரங்களுக்கு போஸ்ட் ஆபீஸில் விசாரிக்கவும்.
மேலும் படிக்க
வருமானத்தை பெருக்க சிறந்த வழி: புளோட்டர் பண்டு திட்டம்!
வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்ற சரியாக திட்டமிடுவது எப்படி?
Share your comments