1. Blogs

அஞ்சல் துறை வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

R. Balakrishnan
R. Balakrishnan
Post Office Recruitment

இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தின் சென்னை அஞ்சல் மோட்டார் சேவைக்கான Skilled Artisan பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு டிசம்பர் 8 ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் விரைந்து விண்ணப்பித்து பயனடையவும்.

 

அஞ்சல் துறை வேலைவாய்ப்பு (Post Office Jobs)

பணி: Skilled Artisan

காலியிடங்கள்: 7

துறைவாரியான காலிடங்கள் விவரம்:

  • M.V. Mechanic (Skilled) - 4
  • M.V. Electrician (Skilled) - 1
  • Copper & Tinsmith (Skilled) - 1
  • Upholster (Skilled) - 1

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200

தகுதி

சம்மந்தப்பட்ட பிரிவில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தொடர்புடைய துறைகளில் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எம்.வி.மெக்கானிக் பணிக்கு விண்ணப்பிப்போர் ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு

1.7.2022 தேதியின்படி, 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை

தொழிற்முறைத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.indiapost.gov.in இல் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, தெளிவாக பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அஞ்சல், விரைவு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

முகவரி: மூத்த மேலாளர், அஞ்சல் ஊர்தி சேவை, எண்.37, கிரீம்ஸ் சாலை, சென்னை - 600 006

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள்: 9.1.2023

மேலும் படிக்க

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்: விரைவில் உயரும் அகவிலைப்படி!

GST வசூல் எவ்வளவு தெரியுமா? 10 மாதங்களாக தொடர் சாதனை!

English Summary: Postal Department Jobs: Who Can Apply? Published on: 03 January 2023, 11:57 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.