வீட்டில் இருந்தபடியே பொதுமக்கள் அஞ்சல் சேவைகளை பெறும் வகையில், 2020ம் ஆண்டு, ஊரடங்கு சமயத்தில், 'போஸ்ட் இன்போ' (Post Info) என்ற மொபைல் செயலியை, அஞ்சல்துறை அறிமுகப்படுத்தியது.
மீண்டும் கொரோனா வேகமெடுத்துள்ள நிலையில், அஞ்சல் நிலையத்திற்கு வராமலே, பல்வேறு சேவைகளை பெற, 'போஸ்ட் இன்போ' செயலியை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என, அஞ்சல்துறை தெரிவித்துள்ளது.
போஸ்ட் இன்போ (Post Info)
போஸ்ட் இன்போ மொபைல் செயலியை, கூகுள் பிளே ஸ்டோர் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில், விரைவு அஞ்சல், பதிவு அஞ்சல், பார்சல் என புக் செய்த அனைத்து வகை அஞ்சல்களையும், எலக்ட்ரானிக் மணி ஆர்டர் குறித்தும், கண்காணிக்க முடியும்.
சேவைகள் (Services)
அஞ்சல் நிலையங்களை கண்டறிய, தங்களது புகார்கள் குறித்து கண்காணிக்க மற்றும் போஸ்டேஜ் கால்குலேட்டர், இன்சூரன்ஸ் பிரீமியம் மற்றும் வட்டி கால்குலேட்டர் உள்ளிட்ட சேவைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.
வெளியில் வந்து அலைவதைத் தவிர்க்கும் விதமாக உருவாக்கப்பட்ட அஞ்சல் நிலையத்தின் இந்த போஸ்ட் இன்ஃபோ சேவையை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்த வேண்டும். இதனால், நேரம் மிச்சமாவதோடு, போக்குவரத்து அலைச்சலும் தவிர்க்கப்படும்.
மேலும் படிக்க
Share your comments