பாகற்காய் சாகுபடியில், கூடுதல் வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் தெரிவித்து உள்ளனர். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் பகுதிகளில், கிணற்றுப்பாசனத்தின் மூலம் காய்கறி சாகுபடி செய்து வருகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் பாகற்காயினை பல ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ளனர்.
விவசாயிகள் நிலப்போர்வை தொழில் நுட்பம் பயன்படுத்தி பாகல் சாகுபடி செய்துள்ளனர். நேர்த்தியாகவும், திட்டமிட்டும் சாகுபடி செய்துள்ளதால் நல்ல வருவாய் கிடைத்துள்ளதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர். அதன்படி நிலத்தை சமன்படுத்தி, மேட்டுப்பாத்திகள் அமைத்து, அதில் சொட்டுநீர் பாசனம் அமைத்து அதற்கு மேல் நிலப்போர்வை அமைத்து, குறிப்பிட்ட இடைவெளியில் துளைகள் இட்டு, பாகல் விதைகள் நடவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
நிலப்போர்வை முறையில், சாகுபடி செய்வதால் பாசனத்துக்கு குறைவான நீரே தேவைப் படுகிறது. இதன் மூலம் நீர் ஆவியாகுதல் பெருமளவு தடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாது இம்முறையில் களைகள் வளராது. அறுபது நாட்களில் காய்கள் அறுவடைக்கு வந்து விடும். தொடர்ந்து ஐந்து மாதங்கள் வரை பலன் தருவதுடன் நல்ல வருவாய் கிடைப்பதாக விவசாயிகள் கூறினர்.
Share your comments