புதுச்சேரி, காரைக்கால் விவசாயிகள் பயனடையும் வகையிலும், ஆட்கள் பற்றாக்குறையை தீர்க்கும் வகையிலும் மானிய விலையில் வேளாண் உபகரணங்கள் வழங்குவதற்கான ஆணையை, அமைச்சர் கமலக்கண்ணன் வழங்கினார்.
புதுச்சேரியில் மாநிலத்தில் விவசாய பணிகளுக்கு போதிய ஆட்கள் இல்லாததால் சாகுபடி பணி மேற்கொள்வது மிகுந்த சிரமாக உள்ளதால் அரசு அதனை தீர்க்கும் வகையில், பண்ணை இயந்திரமயமாக்கல் என்னும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. அவற்றின் படி வேளாண்மைக்கு தேவையான டிராக்டர், நெல் நடவு இயந்திரம், பவர் டில்லர் உள்ளிட்ட பல உபகரணங்களை வழங்க உள்ளது. பயனாளிகளுக்கு அதிகபட்சம் ரூ.2.50 லட்சம் வரை இயந்திரத்திற்கு ஏற்ப, 50 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.
காரைக்கால் பகுதியிலும் இத்திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு மானிய விலையில் பண்ணை இயந்திரங்கள் வாங்குவதற்கு ஆணை வழங்கப் பட்டது. இதில் கூடுதல் வேளாண் துறை இயக்குனர் மற்றும் துணை இயக்குனர் ஆகியோர் கலந்துக் கொண்டனர். அமைச்சர் கூறுகையில், புதுச்சேரி மாநில அரசு தற்போது மிகுந்த நிதி நெருக்கடியினை சந்தித்து வருகிறது. இருப்பினும் விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு, வேளாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இத்திட்டம் செயல் படும் என்றார். இதன் மூலம் விவசாயிகள் உற்பத்தியை மட்டுமின்றி தங்கள் வருவாயினையும் பெருக்கிக் கொள்ள இயலும் என்றார்.
Share your comments