தேசிய வேளாண் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் 2019-20ம் ஆம் ஆண்டுக்கான ரபி பருவத்திற்கான நெல், சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம், எள், சூரியகாந்தி, நிலக்கடலை, உளுந்து, துவரை, பாசிப்பயறு, பருத்தி, கரும்பு ஆகிய பயிர்களுக்காக காப்பீட்டுத்தொகை செலுத்துவதற்கான அறிவிப்பை வேளாண்மை இணை இயக்குனரகம் அறிவித்துள்ளது.
விவசாயிகள் மழை, வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கைச் சீற்றங்களிலிருந்து தங்களது பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பொழுதும், பூச்சி நோய் தாக்குதலினால் ஏற்படும் மகசூல் குறைவிற்கு நிவாரணம் கிடைக்கும் வகையில் பயிர் காப்பீட்டுத் திட்டமானது செயல்பட்டு வருகிறது.
ரபி பருவத்திற்கான வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு அக்ரி கல்ச்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிட் மூலம் செயல்படுத்தப்படுகிறது என காஞ்சிபுரம், வேளாண்மை இணை இயக்குநர் மு.அசோகன் கூறினார். 2019-20ம் ஆண்டிற்கான ரபி பருவத்திற்கான வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு விவரம் பின்வருமாறு.
பயிர் காப்பீடு |
கடைசி நாள் |
காப்பீடு தொகை |
பச்சைப்பயறு |
15.01.2020 |
ரூ.236 |
உளுந்து மற்றும் நிலக்கடலை |
31.01.2020 |
ரூ.236/ ரூ.392 |
நெல் மற்றும் எள் |
29.02.2020 |
ரூ.429/ ரூ.131 |
கரும்பு |
31.10.2020 |
ரூ.2650 |
விவசாயிகள் தெரிந்து கொள்ள வேண்டியவை
- பயிர் காப்பீடு திட்டத்தில் இணைய விரும்பும் விவசாயிகள், கடன் பெறும் வங்கிகளில் பதிவு செய்து தங்களை இணைத்துக் கொள்ளலாம்.
- கடன் பெறாத விவசாயிகள் எனில், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், பொது சேவை மையங்கள் அல்லது தேசிய வங்கிகளின் மூலமாக பயிர் காப்பீடு திட்டத்தில் தங்களது பெயரினை பதிவு செய்து கொள்ளலாம்.
- பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யும் போது, அத்துடன் பதிவு விண்ணப்பம், பட்டா, அடங்கல், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு புத்தக முதல் பக்கம் நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து அதற்கான அதிகாரியிடம் கொடுத்து உரிய ரசீது பெற்றுக் கொள்ளும் படி கேட்டுக் கொள்ளகிறார்கள்.
மேலும், விவரங்களுக்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு விவரங்களை பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share your comments