குடும்ப அட்டை தொடர்பான விதிமுறைகளை அரசு மாற்றத் திட்டமிட்டுள்ளது. இதனால் குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் இனி ரேஷன் பொருட்கள் கிடைக்க வாய்ப்பு கிடையாது.
ரேஷன் கார்டு
குடும்ப அட்டை எனப்படும் ரேஷன் கார்டு என்பது வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஏழை எளிய மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து வழங்கப்படும் அட்டையாகும். இதை வைத்து ரேஷன் கடைகளில் இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்களை வாங்கலாம். நிதியுதவி போன்ற அரசின் நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன.
புதிய விதிமுறைகள்
இந்நிலையில், குடும்ப அட்டை தொடர்பான விதிமுறைகளில் அரசு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உணவு மற்றும் பொது விநியோகத் துறை தகவல் தெரிவித்துள்ளது.
புதிய வரைவு
உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, நாடு முழுவதும் உள்ள நுகர்வோருக்கு இலவச ரேஷன் வசதி வழங்கப்பட்டு வரும் நிலையில், தகுதியான குடிமக்களுக்கான அளவுகோல்களை மாற்ற அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இப்போது புதிய தரநிலைக்கான வரைவு கிட்டத்தட்ட தயாராகிவிட்டதாகக் கூறப்படுகிறது.
குறைந்த விலையில்
புதிய தரநிலைகளை அமைக்க மாநில அரசுகளுக்கான கூட்டங்கள் நடந்தன. தற்போது, நாடு முழுவதும் சுமார் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) பலனைப் பெறுகின்றனர். பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பலர் இலவச ரேஷன் மற்றும் மலிவான ரேஷன் வசதியின் பலன்களைப் பெற்று வருகின்றனர். அதில் முறைகேடுகள் நடக்காமல் இருக்க புதிய விதிமுறைகள் வருகின்றன.
வெளிப்படைத்தன்மை
பொது விநியோகத் துறை அமைச்சகம் தற்போது விதிமுறைகளை மாற்றப் போகிறது. உண்மையில், இப்போது புதிய தரநிலை முற்றிலும் வெளிப்படையானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. பயனாளிகள் அனைவரும் ஒரே மாதிரியாகப் பயன்பெறும் வகையிலும், மோசடிகள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கும் வகையிலும் புதிய விதிமுறைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தகுதியுள்ளவர்களுக்கு
விதிமுறைகளை மாற்றுவது குறித்து பலகட்ட விவாதங்கள் நடந்து வருகின்றன. இது தவிர பல்வேறு கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன. அவை இறுதி செய்யப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய விதிமுறைகளின் கீழ், தகுதியான குடிமக்கள் மட்டுமே அரசின் ரேஷன் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். தகுதியற்ற நபர்களுக்கு இனி ரேஷன் உதவிகள் கிடைக்காது.
மேலும் படிக்க...
குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
சயனைடை விட 6,000 மடங்கு - அதிக நச்சுள்ள உலகின் கொடிய தாவரம்!
Share your comments