1. Blogs

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் இணையவதற்கு, ரோட்டரி கிளப் இலவச உதவி! பெற்றோர்களுக்கு அழைப்பு!

KJ Staff
KJ Staff
Credit : Samayam

தமிழகம் முழுவதும், 10 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக, 'செல்வமகள்' சேமிப்பு கணக்கு (Selvamagal savings account) துவங்க, திருப்பூர் மேற்கு ரோட்டரி கிளப் (Rotary Club) திட்டமிட்டுள்ளது. இதனால், செல்வமகள் திட்டம் பற்றி அறியாதவர்கள் மற்றும் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ளவர்களுக்கு பேருதவியாக அமையும்.

செல்வமகள் சேமிப்பு திட்டம்:

பெண் குழந்தைகளின் எதிர்கால சேமிப்புக்காக, செல்வமகள் சேமிப்பு திட்டத்தை பிரதமர் மோடி (PM Modi) அறிமுகப்படுத்தினார். 10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளின் பெயரில் தபால் அலுவலகங்களில் (Post Office) கணக்கு துவங்கலாம். ஓராண்டுக்கு குறைந்தபட்சம், 250 ரூபாய் டெபாசிட் (Deposit) செய்ய வேண்டும். ஆண்டுக்கு, 7.6 சதவீத வட்டி (Interest) உண்டு. 21 வயதில் கணக்கு முடிக்கும் போது, மூன்று மடங்கு தொகை கிடைப்பதால், மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளது.

ரோட்டரி கிளப் - இலவச உதவி:

தமிழகத்தில் திருப்பூர் மேற்கு ரோட்டரி கிளப் (Rotary Club) சார்பில், 10 ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு இலவசமாக கணக்கு (Free Account) துவங்கப்பட உள்ளது. ரோட்டரி கிளப் தலைவர் ரகுபதி (Ragupathi) கூறுகையில், அந்தந்த பகுதியில் உள்ள பயனாளர்கள், தபால் அலுவலகங்கள் வாயிலாக தேர்வு செய்யப்படுவர். ஒவ்வொருவரின் பெயரிலும், 250 ரூபாய் செலுத்தி கணக்கு துவங்கப்படும். மத்திய அமைச்சர்கள் முன்னிலையில், இதற்கான பாஸ்புத்தகம் (Passbook) விநியோகிக்க திட்டமிட்டுள்ளோம்.

தொடர்புக்கு:

ரோட்டரி கிளப் அளிக்கும் இலவச சேவையைப் பயன்படுத்திக் கொள்ள விரும்புவோர், 98435 12288 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

விவசாயிகள் வருமானத்தை அதிகரிக்க 100-வது கிசான் விவசாயிகள் ரயிலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

ஓய்வு காலத்தில் சுகமாக வாழ சிறந்த திட்டம் எது? VPF vs PPF!

English Summary: Rotary Club Free Help to Join Selvamagal Savings Program! Call the parents! Published on: 30 December 2020, 06:46 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.