வாங்கும் சம்பளத்தில் ஒரு சிறு தொகையை இப்போதே நீங்கள் சேமித்து வைத்தால் கடைசிக் காலத்தில் நிதி நெருக்கடி இல்லாத வாழ்க்கை வாழலாம். அப்போது பணத்துக்காக யாரையும் நம்பி வாழும் சூழல் இருக்காது. உங்களுடைய எதிர்காலத்தை பாதுகாப்பாக மாற்றவும் சிறிய முதலீட்டில் அதிகம் லாபம் தரவும் தபால் நிலைய சேமிப்புத் திட்டங்கள் உங்களுக்குப் பெரிதும் உதவியாக இருக்கும். தபால் நிலைய சிறு சேமிப்புத் திட்டங்களிலேயே மிக முக்கியமான ஒரு திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS).
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS)
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் தற்போது 7.4 சதவீத வட்டி லாபம் கிடைக்கிறது. ஐந்தே ஆண்டுகளில் இத்திட்டத்தின் கீழ் நீங்கள் ரூ.14 லட்சம் வரை சம்பாதிக்கலாம்.
ஓய்வு பெறும் நபர்களுக்கு தபால் நிலைய மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் பெரும் உதவியாக இருக்கும். வாழ்நாள் முழுவதும் நீங்கள் சேமித்த தொகையை இதில் போட்டு வைத்தால் அளவு கடந்த லாபத்தைப் பெறலாம்.
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் 60 வயதைத் தாண்டிய மூத்த குடிமக்கள் மட்டுமே சேமிக்க முடியும்.
அதேபோல, விருப்ப ஓய்வு பெற்று வெளியேறியவர்களும் இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் நீங்கள் மொத்தமாக ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 7.4 சதவீத வருடாந்திர வட்டியில் 5 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு ரூ.14.28 லட்சம் கிடைக்கும். இதில் உங்களுடைய லாபம் மட்டுமே ரூ.4,28,964 ஆகும். இது வட்டி வாயிலாகக் கிடைக்கும் வருமானம் ஆகும்.
அருகில் உள்ள தபால் நிலையத்திலேயே 1000 ரூபாய் செலுத்தி நீங்கள் கணக்கு தொடங்கலாம். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இத்திட்டத்தின் கீழ் நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் விலக்கு கிடைக்கிறது.
மேலும் படிக்க
Post Office: மாதந்தோறும் வருமானம் கிடைக்க சிறப்பான அஞ்சலக திட்டம்!
PF வாடிக்கையாளர்களுக்கு இப்படி ஒரு வசதி இருக்கா? யாருக்கும் தெரியாத திட்டம்!
Share your comments